Dinamalar-Logo
Dinamalar Logo


/புகார் பெட்டி /விழுப்புரம்/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி

ADDED : செப் 23, 2025 11:34 PM


Google News
குண்டும், குழியுமான சாலை குச்சிப்பாளையம்-அனிச்சம்பாளையம் கிராமங்களுக்கு செல்லும் சாலை குண்டும், குழியாகவும் பயணிக்க லாயக்கற்ற நிலையில் உள்ளது.

- சகாதேவன், குச்சிப்பாளையம். தாறுமாறாக நிற்கும் வாகனங்கள் வளவனுார் பஜார் வீதியில் தாறுமாறாக சாலையில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து பாதிக்கிறது.

- விஸ்வநாதன், வளவனுார். விதிகளை மீறுவதால் விபத்து கோலியனுார் கூட்ரோடு வளைவில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் தாறுமாறாக திரும்புவதால் விபத்து ஏற்படுகிறது.

- வரதராஜன், கோலியனுார். நகராட்சி சுவர்களில் அசுத்தம் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நகராட்சி சுவர்களில் பலர் எச்சில் துப்பி அசுத்தம் செய்து வருகின்றனர்.

- அம்சவள்ளி, விழுப்புரம். பன்றிகள் தொல்லை விழுப்புரம் திருநகரில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

- சந்தானகிருஷ்ணன், விழுப்புரம். குதிரைகளால் நேரும் விபத்து காணையில் கோவிலுக்கு பிராத்தனைக்காக விடப்பட்ட குதிரைகள் சாலையில் தாறுமாறாக திரிவதால் விபத்துகள் ஏற்படுகிறது.

- விக்னேஷ், காணை. விதி மீறலால் விபத்து அபாயம் விழுப்புரம், வீரவாழி மாரியம்மன் கோவில் அருகே சிக்னலில் நிற்காமல் விதிகளை மீறி வாகனங்களை, பலர் ஓட்டி செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது.

- கோமதி, விழுப்புரம். தடைபடும் குடிநீர் வினியோகம் மணம்பூண்டி பகுதியில் குடிநீர் வினியோகம் தொடர்ந்து தடைபடுவதால் மக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.

- கிருஷ்ண பிரதாப்சிங், மணம்பூண்டி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us