Dinamalar-Logo
Dinamalar Logo


/புகார் பெட்டி /திருப்பூர்/ 'திடம்' இல்லாத திடக்கழிவு மேலாண்மை

'திடம்' இல்லாத திடக்கழிவு மேலாண்மை

'திடம்' இல்லாத திடக்கழிவு மேலாண்மை

'திடம்' இல்லாத திடக்கழிவு மேலாண்மை

ADDED : செப் 01, 2025 12:26 AM


Google News
Latest Tamil News
பதம் பார்க்கிறது

மாநகராட்சி 17வது வார்டு, ஜே.பி., நகர் மெயின் ரோட்டில், முட்செடிகள் வளர்ந்து ரோட்டோரம் பரவி நிற்கின்றன. முட்செடிகள் வாகன ஓட்டிகளையும், பாதசாரிகளையும் அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

- ரஞ்சித், திருப்பூர்.

தெரு இருள்மயம்

கொடுவாய் மகரிஷி நகரில் உள்ள தெரு விளக்கு உடைந்து 10 நாட்களுக்கு மேலாகிறது. தெருவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.- தாமு, கொடுவாய்.

கடும் துர்நாற்றம்

மங்கலம் ரோடு, செங்குந்தபுரம் 2வது வீதியில் உள்ள சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. ஒரு மாதத்துக்கும் மேலாக கழிவு நீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது.

- கதிர், செங்குந்தபுரம்

சாலை சிதிலம்மங்கலம் ரோடு, தீயணைப்பு நிலையம் வழியாக உள்ள ஜம்மனை ரோடு சிதிலமடைந்து பல நாட்களாக காணப்படுகிறது. வாகனங்கள் செல்வதில் சிரமம் நிலவுகிறது. - வின்சென்ட்ராஜ், ராயபுரம்.

மணலால் ஆபத்து

அங்கேரிபாளையம் பகுதியில் விக்னேஸ்வரா பள்ளி எதிரேயுள்ள ரோட்டில் மணலைக் கொட்டி குவித்து வைத்துள்ளனர். வாகனங்கள் செல்வதால் ரோடு முழுவதும் பரவி, ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

- சுரேஷ், அங்கேரிபாளையம்.

தரம் பிரிக்காமல்...

மாநகராட்சி 32வது வார்டுக்கு உட்பட்ட டி.பி.ஏ., காலனி பகுதியில் வீடுகளில் குப்பைகள் தரம் பிரித்து வாங்குவதில்லை. திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக செயல்படுத்த வேண்டும். - குமரசேன், டி.பி.ஏ., காலனி.

சாலையில் கழிவுநீர்

முதலிபாளையம் ஊராட்சி, சிட்கோ வளாகம் எதிரேயுள்ள ஜி.வி.என்., நகரில் கழிவு நீர் வடிகால் வசதியில்லை. வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் ரோட்டில் சென்று பாய்கிறது. வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் நிலவுகிறது. துர்நாற்றம் வீசுவதோடு ரோடும் சேதமாகிறது.

- கார்த்தி, வெள்ளக்கரடு.

மாநகராட்சி 41வது வார்டு முருகம்பாளையம், சூரிய கிருஷ்ணா நகர், வீதிகளில் சாக்கடை கழிவு நீர் பாய்ந்தோடுகிறது. சாக்கடை கால்வாயைச் சரி செய்ய வேண்டும்.

- கேசவன், முருகம்பாளையம்.

சாலை மோசம்

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 19வது வார்டு, எஸ்.வி., காலனி கிழக்கு 2வது வீதியில் உள்ள ரோடு மோசமாக உள்ளது. பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது. உடனடியாக அதை சீரமைக்க வேண்டும்.

- செந்தில்குமார், எஸ்.வி., காலனி.

குப்பைக்குத் தீ

மாநகராட்சி ஆறாவது வார்டு பகுதியில், பாலன் நகர், பொம்மநாயக்கன்பாளையத்தில் குப்பைகளைக் கொட்டி துாய்மைப்பணியாளர்கள் தீ வைத்து விடுகின்றனர். சுற்றுப்பகுதியில், புகை சூழ்ந்து சிரமம் நிலவுகிறது.

- முருகேசன், பாலன் நகர்.

அகலாத குப்பை

திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள வடக்கு உழவர் சந்தை முன்புறம் பெருமளவு காய்கறி கழிவுகள் கொட்டிக்கிடக்கின்றன. இதனால், சுற்றுப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, ஏராளமான பூச்சியினங்கள் காணப்படுகின்றன.

- மனோஜ்குமார், திருப்பூர்.

----

ரியாக்ஷன்

ரோடு சீரமைப்பு

மாநகராட்சி 7வது வார்டு குருவாயூரப்பன் நகர் பகுதியில் ரோடு மோசமாக உள்ளது குறித்து 'தினமலர்' நாளிதழில் புகார் வெளியானது. உடனடியாக அதை சீரமைப்பு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

- குமரேசன், குருவாயூரப்பன் நகர்.

குப்பை அகற்றம்வளையன்காடு, வ.உ.சி., நகர் தெற்கு பகுதியில் குப்பைகள் அகற்றாமல் தேங்கிக்கிடந்தன. இதுகுறித்த செய்தி வெளயிடப்பட்டது. இதையடுத்து உடனடியாக தேங்கிக் கிடந்த குப்பைகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டன.

- பிரசாந்த் சரவணன், வளையன்காடு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us