/புகார் பெட்டி /திருவள்ளூர்/திருவள்ளூர்: புகார் பெட்டி; புல்லுார் கணவாய் சாலை விரிவாக்கம் அவசியம்திருவள்ளூர்: புகார் பெட்டி; புல்லுார் கணவாய் சாலை விரிவாக்கம் அவசியம்
திருவள்ளூர்: புகார் பெட்டி; புல்லுார் கணவாய் சாலை விரிவாக்கம் அவசியம்
திருவள்ளூர்: புகார் பெட்டி; புல்லுார் கணவாய் சாலை விரிவாக்கம் அவசியம்
திருவள்ளூர்: புகார் பெட்டி; புல்லுார் கணவாய் சாலை விரிவாக்கம் அவசியம்
ADDED : ஜூன் 11, 2025 09:18 PM
பள்ளிப்பட்டில் இருந்து சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது புல்லுார் காப்புக்காடு. இந்த காப்பு காட்டில் மலைகளுக்கு இடையேயான கணவாய் வழியாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு குறுகலான திருப்பங்கள் அமைந்துள்ளன. இதனால் விபத்துகள் நடந்து வருகின்றன.
கொசஸ்தலை ஆறு கூட்டு குடிநீர் திட்டத்திற்காக சமீபத்தில் இந்த கணவாய் வழியாக குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. கணவாய் பகுதியில் உள்ள குறுகலான சாலை திருப்பத்தில் பாறைகள் குழாய் பதிப்பிற்காக வெட்டி சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த குறுகலான சாலை திருப்பத்தில் புதிய வழித்தடம் அமைக்க இடம் கிடைத்துள்ளது.
இந்த இடத்தில் சாலையை நேராக அகலப்படுத்தி அமைத்தால், விபத்துகளின் எண்ணிக்கை குறையும். நெடுஞ்சாலைத் துறையும், வனத்துறையும் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- மோ. கிருஷ்ணன், புல்லுார்.