/புகார் பெட்டி /காஞ்சிபுரம்/காஞ்சிபுரம்: புகார் பெட்டி; உலர்ந்த மரக்கிளையால் தீ விபத்து அபாயம்காஞ்சிபுரம்: புகார் பெட்டி; உலர்ந்த மரக்கிளையால் தீ விபத்து அபாயம்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; உலர்ந்த மரக்கிளையால் தீ விபத்து அபாயம்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; உலர்ந்த மரக்கிளையால் தீ விபத்து அபாயம்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; உலர்ந்த மரக்கிளையால் தீ விபத்து அபாயம்
ADDED : ஜூலை 25, 2024 01:56 AM

உலர்ந்த மரக்கிளையால் தீ விபத்து அபாயம்
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் வடக்கு ராஜகோபுரம் அருகில், பொது கழிப்பறை கட்டடத்தை ஒட்டி மின்மாற்றி பொருத்தப்பட்டுள்ளது.
மின்மாற்றியின் கீழ், போடப்பட்டுள்ள உலர்ந்த மரக்கிளைகள், சருகுகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், இவ்வழியாக பாதசாரிகளால் வீசப்படும் துண்டு சிகரெட், தீக்குச்சியில் உள்ள நெருப்பு காரணமாக மரக்கிளையில் அடிக்கடி தீப்பிடிக்கிறது.
எனவே, பெரிய அளவில் தீவிபத்து ஏற்படுவதற்குள் மின்மாற்றியின் கீழ் பகுதியில் உலர்ந்த மரக்கிளைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- டி.ராஜா, காஞ்சிபுரம்.