சாலை விரிவாக்க பணி மந்தம்
திருக்கோவிலுார் தீயணைப்பு நிலையம் அருகே சாலை விரிவாக்க பணி மந்தமாக நடப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
-முருகேசன், சந்தப்பேட்டை.
மணல் திருட்டு தடுக்கப்படுமா?
அரகண்டநல்லுார், தென்பெண்ணையாற்றில் நடைபெறும் மணல் திருட்டை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், மணம்பூண்டி.
உலர்களமான சாலையால் அவதி
கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் பஸ் நிறுத்தத்தில் உள்ள நிழற்குடை பகுதி சாலை, விவசாய பொருட்களின் உலர் களமாக மாறி உள்ளது.
-சந்தோஷ், உலகங்காத்தான்.
குப்பையால் சுகாதார சீர்கேடு
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
-ராமன், கள்ளக்குறிச்சி.