Dinamalar-Logo
Dinamalar Logo


/புகார் பெட்டி /கள்ளக்குறிச்சி/ புகார் பெட்டி..

புகார் பெட்டி..

புகார் பெட்டி..

புகார் பெட்டி..

ADDED : மார் 22, 2025 04:13 AM


Google News

சாலை தடுப்பு தேவை


கள்ளக்குறிச்சி நகரத்தின் முக்கிய சாலைகள் நடுவே தடுப்பு கட்டைகள் மற்றும் சாலைகளில் இருபுறங்களிலும் நடைமேடைகளை அமைக்க வேண்டும்.

------செல்வம், கள்ளக்குறிச்சி.

நாய்கள் அச்சுறுத்தல்


மணம்பூண்டி, ஓம் சக்தி நகர், ராமகிருஷ்ணா வீதியில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

--பிரேமலதா, மணம்பூண்டி.

போக்குவரத்து பாதிப்பு


கள்ளக்குறிச்சி முக்கிய சாலைகளில் டாடா ஏஸ், தள்ளு வண்டி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி காய்கறி, பழங்களை விற்பனை செய்வதால் போக்குவரத்து பாதிக்கிறது.

--குமார், கள்ளக்குறிச்சி.

விபத்து அபாயம்


கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் சாலையை அடைத்த படி பஸ் நிறுத்தம் இருப்பதால் அங்கே அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் தொடர்கின்றன.

--தங்கராஜ், கள்ளக்குறிச்சி.

கரித்துகளால் அவதி


கள்ளக்குறிச்சி அரசு மகளிர் பள்ளிக்கு அருகில் நவீன அரிசி ஆலை இருப்பதால், அதிலிருந்து வெளிப்படும் கரித்துகள்கள் மாணவியரை பாதிக்கிறது.

--மாணிக்கம், கள்ளக்குறிச்சி.

குறைந்த மின்னழுத்தம்


கள்ளக்குறிச்சி நகரின் பெரும்பாலான பகுதிகளிலும் இரவு நேரங்களில் குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு வருகிறது.

--கந்தசாமி, கள்ளக்குறிச்சி.

போலீசார் கவனிப்பார்களா


கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தின் உள்ள இருசக்கர வாகனங்கள் வருவதை போலீசார் கண்காணித்து தடுக்க வேண்டும்.

--கருணாநிதி, கள்ளக்குறிச்சி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us