Dinamalar-Logo
Dinamalar Logo


/புகார் பெட்டி /கள்ளக்குறிச்சி/புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

ADDED : மார் 19, 2025 05:26 AM


Google News

மின் விளக்கு வசதி தேவை


கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை செல்லும் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் அவ்வழியாக செல்வது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

-காமராஜ், கள்ளக்குறிச்சி

போக்குவரத்து நெரிசல்


கள்ளக்குறிச்சியில் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி, ஆட்டோ ஓட்டுனர்கள் போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் வரிசையாக வாகனங்களை நிறுத்தி, ஆள் பிடிப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

-பாஸ்கர், கள்ளக்குறிச்சி

மக்கிப்போன டவர்


தச்சூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் பி.எஸ்.என்.எல்., டவர் ஒன்று பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் துருப்பிடித்து மக்கிப்போய் உள்ளது. விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் அந்த டவரை அங்கிருந்து அகற்ற வேண்டும்.

-ரவி, கள்ளக்குறிச்சி

மின்சாரம் விரயம்


கள்ளக்குறிச்சியில் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் பணியாளர்கள் இல்லாத அறைகளிலும் அவசியமின்றி மின் விசிறிகளை ஓடவிட்டு மின்சாரத்தை வீணடிப்பது வாடிக்கையாக உள்ளது.

--முத்தையன், கள்ளக்குறிச்சி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us