ADDED : மே 27, 2025 06:59 AM
விபத்து அபாயம்
விருத்தாசலம் பாலக்கரை பஸ் நிறுத்தத்தில் தாறுமாறாக பஸ்கள் நிறுத்தப்படுவதால், பாதசாரிகளுக்கு விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
சக்திவேல், விருத்தாசலம்.
கூடுதல் இருக்கை தேவை
வேப்பூர் தாலுகா அலுவலகத்தில் பயனாளிகளுக்கு கூடுதல் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நவீன், காட்டுமயிலுார்.
பயணிகள் அவதி
ராமநத்தம் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
ராஜேஷ், தொழுதுார்.