Dinamalar-Logo
Dinamalar Logo


/புகார் பெட்டி /கோயம்புத்தூர்/ ரோட்டோரம் அகற்றப்படாத பழைய மின்கம்பங்களால் பாதிப்பு

ரோட்டோரம் அகற்றப்படாத பழைய மின்கம்பங்களால் பாதிப்பு

ரோட்டோரம் அகற்றப்படாத பழைய மின்கம்பங்களால் பாதிப்பு

ரோட்டோரம் அகற்றப்படாத பழைய மின்கம்பங்களால் பாதிப்பு

ADDED : செப் 21, 2025 10:58 PM


Google News
Latest Tamil News
ரோடு சேதம் கொண்டம்பட்டியில் இருந்து, கோதவாடி செல்லும் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அவ்வழியில் செல்பவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இரவு நேரத்தில் இவ்வழியாக நடந்து செல்பவர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, இந்த ரோட்டை ஊராட்சி நிர்வாகம் விரைவில் சீரமைக்க வேண்டும்.

- மணி, கிணத்துக்கடவு.

கழிவுநீர் தேக்கம் பொள்ளாச்சி, கோட்டூர் ரோட்டில் தனியார் உணவகம் முன்பாக ரோட்டோரம் கால்வாயில் அடிக்கடி கழிவுநீர் தேங்குகிறது. இதை சுத்தப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டாலும், கால்வாய் அருகே கான்கிரீட் அமைக்கப்பட்டிருப்பதால், தூய்மைப் பணி மேற்கொள்ள சிரமம் ஏற்படுகிறது. பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-- மணிவேல், கோட்டூர்.

அகற்றப்படாத மின்கம்பம் கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி செல்லும் ரோட்டில் லட்சுமி நகர் அருகே ரோட்டோரம் பழைய மின்கம்பங்கள் அகற்றம் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பாதசாரிகளுக்கு இடையூறாக உள்ளது. இதை மின்வாரியத் துறை அதிகாரிகள் கவனித்து விரைவில் அகற்றம் செய்ய வேண்டும்.

- சூர்யா, கிணத்துக்கடவு.

குப்பையால் துர்நாற்றம் கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் பின்புறம் உள்ள, மண் ரோட்டில் குப்பை கொட்டப்படுவதால், அப்பகுதியில் மக்கள் நடக்க முடியாத அதிகளவுக்கு துர்நாற்றமும் வீசுகிறது. சுகாதாரம் சீர்கெட்டு உள்ளது. இதை ஊராட்சி நிர்வாகத்தினரோ அல்லது ரயில்வே நிர்வாகத்தினரோ கவனித்து, குப்பையை அகற்றம் செய்ய வேண்டும்.

- மோகன் குமார், கிணத்துக்கடவு.

குறுக்கு பட்டையை அகற்றுங்க! பொள்ளாச்சி, பல்லடம் ரோட்டில் இருந்து மகாலிங்கபுரம் திரும்பும் ரோட்டில் பெரிய அளவில் குறுக்கு பட்டைகள் வெள்ளை நிறத்தில் போடப்பட்டுள்ளது. இதில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் பலர் அவதிக்குள்ளாகின்றனர். வாகனங்களும் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. எனவே, இந்த குறுக்குப் பட்டையை அகற்றம் செய்ய வேண்டும்.

-- பெருமாள், பொள்ளாச்சி.

பஸ் ஸ்டாண்டில் இடநெருக்கடி உடுமலை புது பஸ் ஸ்டாண்டில் இட நெருக்கடி காணப்படுகிறது. இதனால், பஸ்களில் பயணியர் ஏறுவதில் சிரமம் ஏற்படுகிறது. இது குறித்து நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சுரேஷ், உடுமலை.

சுகாதார சீர்கேடு உடுமலை, மினி மார்க்கெட் பகுதியில் ரேஷன் கடை, வணிக வளாகங்கள் அதிகம் உள்ளன. மாலை நேரங்களில் அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயை பொதுமக்கள் திறந்த வெளிக்கழிப்பிடமாக மாற்றிவிட்டதால், மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது.

- மகேந்திரன், உடுமலை.

வாகனங்கள் ஆக்கிரமிப்பு உடுமலை, சத்திரம் வீதியில் சரக்கு வாகனங்கள் ரோட்டில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாத வகையில் ஆக்கிரமித்து நீண்ட நேரம் நிறுத்தப்படுகின்றன. இதனால் அவ்வழியை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.

- தினேஷ், உடுமலை.

போக்குவரத்து நெரிசல் உடுமலை, தளி ரோட்டில் வாகனங்கள் ரோட்டோரம் விதிமுறை மீறி நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் விதிமுறை பின்பற்றி நிறுத்துவதற்கு போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வினிதா, உடுமலை.

எரியாத தெருவிளக்குகள் உடுமலை, பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் தெருவிளக்குகள் எரியாமல் இருக்கின்றன. வாகன ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் போது அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடந்து செல்வதற்கும் சிரமமாக உள்ளது.

- மாதவன், பெரியகோட்டை.

காய்ந்து வரும் செடிகள் உடுமலை பஸ்ஸ்டாண்ட் அருகே பழநி ரோட்டில் மையத்தடுப்பு உள்ளது. இவற்றில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் செடிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றிற்கு தண்ணீர் ஊற்றாததால், காய்ந்து வருகின்றன. எனவே, செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- முருகன், உடுமலை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us