/புகார் பெட்டி /கோயம்புத்தூர்/ ராம்நகர் பட்டேல் ரோட்டில் தினமும் வாகன நெரிசல்; ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை விரிவுபடுத்த கோரிக்கை ராம்நகர் பட்டேல் ரோட்டில் தினமும் வாகன நெரிசல்; ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை விரிவுபடுத்த கோரிக்கை
ராம்நகர் பட்டேல் ரோட்டில் தினமும் வாகன நெரிசல்; ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை விரிவுபடுத்த கோரிக்கை
ராம்நகர் பட்டேல் ரோட்டில் தினமும் வாகன நெரிசல்; ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை விரிவுபடுத்த கோரிக்கை
ராம்நகர் பட்டேல் ரோட்டில் தினமும் வாகன நெரிசல்; ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை விரிவுபடுத்த கோரிக்கை

நடைபாதை சரியில்லை
வரதராஜபுரம் காமராஜர் பிரதான சாலை இ.எஸ். ஐ., மருத்துவமனை பஸ் நிறுத்தம் எதிரில், நடைபாதை ஸ்லாப் ஆபத்தான நிலையில் உள்ளது. பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனை சீர்செய்து தரவேண்டும்.
சுகாதார சீர்கேடு
லிங்கனுார் அண்ணாநகர் 2வது வீதியில், சாக்கடை அடைப்பு பல மாதங்களாக சரி செய்யப்படவில்லை. இதனால், தண்ணீர் தேங்கி கழிவுநீர் வீட்டுக்குள் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதியில் நின்ற பணிகள்
துடியலுார் வார்டு 14, வி.கே.எல் நகர் 4வது வீதியில், நிலத்தடி குழாய் பதிப்பு பணிக்காக தோண்டப்பட்டு ஐந்து மாதங்கள் ஆகிறது. இதுவரை முழுமையான பணிகள் முடிக்கப்படாமல் விடப்பட்டுள்ளதால், அப்பகுதியில் வாகனங்கள் செல்லவும், மழை பெய்யும் சமயங்களில் நடந்து செல்வதுமே சிரமமாக உள்ளது.
சாலை மோசம்
சித்தாபுதுார் அய்யப்பன் கோவில் அருகே, இரு புறங்களிலும் ரோடு மோசமாக உள்ளது. அவிநாசி சாலை மற்றும் காந்திபுரத்தை இணைக்கும் பிரதான சாலை என்பதால், ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் சாலையில், சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
போக்குவரத்து நெரிசல்
ராம்நகர் சாஸ்திரி ரோடு, பட்டேல் ரோடு இணையும் பகுதியில் தினந்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பகுதி சாலையோர ஆக்கிரமிப்ப்புகளை அகற்றி, விரிவுப்படுத்தி, நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
சாலையில் தேங்கும் கழிவுநீர்
ஒண்டிப்புதுார், 56வது வார்டு, புது இட்டேரி வீதி காமராஜர் சிலை பின்புறம், சாக்கடையில் தேவையில்லாத மண் அகற்றப்படாததால், சாதாரண மழைக்குக் கூட சாக்கடை நிரம்பி, சாலையில் செல்ல முடியாத அளவுக்கு தேங்கிவிடுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீரில் கலக்கும் கழிவுநீர்
பீளமேடு புதுார் வார்டு எண், 52, ஜகனாதன் காலனியில், கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில், தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கழிவுநீர் கலந்த தண்ணீரை குடித்து பலருக்கு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
மோசமான சாலையால் அவதி
காளப்பட்டி ஆறாவது வார்டு, எஸ்.வி.பி., டெக் பார்க் அருகில், எமாமி ஏரோசிட்டி பகுதிக்கு செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேடு, பள்ளங்களால் சாலையில் வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.