/புகார் பெட்டி /கோயம்புத்தூர்/ பாதையை மறைக்கிறது விளம்பர பலகை; நஞ்சுண்டாபுரம் - ஸ்ரீபதி நகரில் விபத்து அபாயம் பாதையை மறைக்கிறது விளம்பர பலகை; நஞ்சுண்டாபுரம் - ஸ்ரீபதி நகரில் விபத்து அபாயம்
பாதையை மறைக்கிறது விளம்பர பலகை; நஞ்சுண்டாபுரம் - ஸ்ரீபதி நகரில் விபத்து அபாயம்
பாதையை மறைக்கிறது விளம்பர பலகை; நஞ்சுண்டாபுரம் - ஸ்ரீபதி நகரில் விபத்து அபாயம்
பாதையை மறைக்கிறது விளம்பர பலகை; நஞ்சுண்டாபுரம் - ஸ்ரீபதி நகரில் விபத்து அபாயம்
ADDED : செப் 14, 2025 11:27 PM

விபத்து அபாயம் நஞ்சுண்டாபுரம் ஸ்ரீபதி நகர் பகுதியில், பாதையை மறைக்கும் வகையில் விளம்பர பலகைகள் வைக்கப்படுவதால், விபத்து அபாயம் ஏற்படுகிறது. வாகனங்கள் வருவது தெரியாமல், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
- மனோகரன், ஸ்ரீபதி நகர்
சாலை ஆக்கிரமிப்பு வெரைட்டி ஹால் சாலை முழுவதும் சைக்கிள் கடைகள், பர்னிச்சர் உள்ளிட்ட அனைத்து கடைகளும் பாதையை ஆக்கிரமித்து உள்ளதால், பாதசாரிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
-பழனிசாமி, டவுன்ஹால்.
கழிவு நீர் தேக்கம் போத்தனுார் தாயம்மாள் லே -அவுட், உழவர் சந்தை கேட்டின் எதிர்புறம் உள்ள சாக்கடையில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், சாக்கடையில் விழுந்து அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கியுள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- பழனிச்சாமி , போத்தனூர்.
நடைபாதையில் அபாயம் ரேஸ்கோர்ஸ் நடைபாதையில், உடற்பயிற்சி செய்யும் இடம் அருகே, சாலை உடைந்து பத்து நாட்களுக்கு மேலாகிறது. பொதுமக்களுக்கு எச்சரிக்கையாக வெறும் கல் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. நடைபயிற்சிக்கு வருபவர்கள் தவறி விழுகின்றனர்.
-மதியழகன், சந்திரகாந்திநகர்
அரைகுறை வேலை சின்ன வேடம்பட்டி முதல் சங்கரா கல்லுாரி செல்லும் சாலை, சுமார் 2 கி.மீ., தொலைவுக்கு பாதாள சாக்கடைக்காக குழிகள் தோண்டப்பட்டன. பணிகள் முடிந்தும் சரிவர மூடாமல் விட்டுள்ளதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
- மணிமாறன், சின்னவேடம்பட்டி
முன்னறிவிப்பு இல்லை வெள்ளக்கிணறு சாலையில், சாய்ராம் அவென்யூ உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடக்கின்றன. எவ்வித முன் அறிவிப்பும் இன்றி சாலைகளில் பள்ளம் தோண்டி விடுவதால், வீடுகளில் இருந்து கார், இரண்டு சக்கர வாகனம் எடுக்க முடியாமல் அவதிப்படுகின்றோம்.
- பட்டாபிராமன், சாய்ராம் அவென்யூ.
சிறிய மழைக்கே அவதி நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி, 2-வது வார்டு, ரெங்கா காலனி, 2-வது கிழக்கு தெரு, பேருந்து நிறுத்தத்திற்கு வரும் பிரதான சிமென்ட் சாலையில், சிறுமழை பெய்தாலும் துர்நாற்றம் வீசும் சாக்கடை கழிவுடன், மழைநீர் கலந்து குளம்போல் தேங்கி நிற்கிறது. குருடம்பாளையம் ஊராட்சி நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும்.
- மனோன்மணி, ரெங்கா காலனி
குப்பை அகற்றவில்லை வார்டு 54ல் அலமேலு நகர் பகுதியில், கடந்த சில நாட்களாக குப்பை சரியாக அகற்றப்படுவதில்லை. தேங்கிவிடுவதால், துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பலமுறை புகார் தெரிவித்தும் இதற்கு தீர்வு காண, பொறுப்பாளர்கள் முன்வருவதில்லை.
- ராஜாத்தி, அலமேலு நகர்
சுகாதார சீர்கேடு கோவை வெரைட்டி ஹால் ரோடு அய்யண்ண கவுடர் வீதியில், ஸ்ரீ சக்தி முனியப்பன் கருப்பராயன் கோயில் அருகில், சாக்கடை நீர் தேங்கி நிரம்பி வழிகிறது. பல ஆண்டுகளாக புகார் அளித்தும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இச்சாக்கடை அருகில்தான் பொதுமக்கள் பயன்படுத்தும், ஆழ்குழாய் தண்ணீர் இணைப்பும் உள்ளது.
- ராஜேஷ், அய்யண்ண கவுடர் வீதி.
விபத்து வாய்ப்பு வார்டு 20ல், பி.பி.சி. காலனி சாலையில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல் அமைப்பை, சாலை மட்டத்திற்கு இறக்கி போட வேண்டும். இதனால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
-ரங்கசாமி, பி.பி.சி. காலனி.
அச்சுறுத்தும் தெரு நாய்கள் மதுக்கரை மார்க்கெட் ரோடு, ரயில்வே மேம்பாலத்தில் இருந்து, குரும்பபாளையம் பிரிவு செல்லும் வழியில், சாலையோரம் இறைச்சிக்கழிவு கொட்டப்படுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், இப்பகுதியில் நாய் தொல்லையும் அதிகரித்துள்ளது. வாகனங்களில் செல்வோர் அச்சத்துடன் இப்பகுதியை கடக்கின்றனர்.
- துரைசாமி, குரும்பபாளையம்.