Dinamalar-Logo
Dinamalar Logo


/புகார் பெட்டி /கோயம்புத்தூர்/ இடையர்பாளையம் வழியாக தாறுமாறான பயணம்! அதிவேகத்தால் தினமும் விபத்துக்கில்லை பஞ்சம்

இடையர்பாளையம் வழியாக தாறுமாறான பயணம்! அதிவேகத்தால் தினமும் விபத்துக்கில்லை பஞ்சம்

இடையர்பாளையம் வழியாக தாறுமாறான பயணம்! அதிவேகத்தால் தினமும் விபத்துக்கில்லை பஞ்சம்

இடையர்பாளையம் வழியாக தாறுமாறான பயணம்! அதிவேகத்தால் தினமும் விபத்துக்கில்லை பஞ்சம்

ADDED : செப் 08, 2025 11:01 PM


Google News
Latest Tamil News
விதிமீறும் வாகன ஓட்டிகள் மேட்டுப்பாளையம் சாலை மூடப்பட்டதை அடுத்து, இடையர்பாளையம் சந்திப்பில் அதிக வாகனங்கள் கடந்து செல்கின்றன. ஒருவழிப்பாதையில் அதிவேகத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளால், விபத்து நடக்கிறது.

- சுந்தரம், இடையர்பாளையம்.

குண்டும், குழியுமான ரோடு மருதமலை இந்திரா நகர், மத்திய வீதியில், பாதாள சாக்கடை பணிகளுக்கு பின், சாலையை சரியாக சீரமைக்கவில்லை. பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது.

- பழனிசாமி, மருதமலை.

மூடப்படாத குழிகள் சின்னவேடம்பட்டி முதல் சங்கரா கல்லுாரி ரோடு செல்லும் வழியில், இரண்டு கிலோ மீட்டர் துாரத்துக்கு பாதாள சாக்கடை அமைக்க குழி தோண்டப்பட்டது. பணிகள் முடிந்த பின்பும் குழிகளை சரியாக மூடாததால், அடிக்கடி விபத்து நடக்கிறது.

- மணிமாறன், சின்னவேடம்பட்டி.

சாலையை கடக்க சிரமம் விளாங்குறிச்சி ரோடு, வி.ஐ.பி., நகரில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. காலை, மாலை நேரங்களில் சாலையை கடக்கவே, பல மணி நேரம் ஆகிறது. சாலை நடுவே தடுப்பு வைக்க வேண்டும்.

- தங்கவேல், விளாங்குறிச்சி.

ஆக்கிரமிப்பால் நெருக்கடி டவுன்ஹால், வெரைட்டி ஹால் ரோட்டில் கடைக்காரர்கள் சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். பொருட்களை நடைபாதையிலும், சாலையிலும் வைத்துள்ளனர். பாதசாரிகள் சாலையில் நடந்து செல்வதால், போக்குவரத்து நெருக்கடி மற்றும் விபத்து நடக்கிறது.

- பழனிசாமி, டவுன்ஹால்.

தடுமாறும் வாகனங்கள் மதுக்கரை, மரப்பாலம் ரயில்வே மேம்பால பணியால் வாகனங்கள், குவாரி ஆபீஸ் குரும்பபாளையம் சாலையை பயன்படுத்துகின்றன. இச்சாலையில், ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் உள்ளன. கார், பஸ், சரக்கு வாகனங்கள் தடுமாறிச் செல்கின்றன. பைக்கில் செல்வோர் கீழே விழுகின்றனர்.

- கார்த்திகேயன், மதுக்கரை.

புதரில் பதுங்கும் பாம்புகள் நரசிம்மநாயக்கன்பாளையம், பாலாஜி நகர் பகுதியில் குடியிருப்பு பகுதியில் அடர்த்தியாக புதர் வளர்ந்துள்ளது. வீடுகளுக்குள் பாம்பு, தேள் போன்றவை அடிக்கடி வருகின்றன. புதரால் சாலையும் குறுகி விட்டது. குடியிருப்பு பகுதிகளில் சாலையோரம் வளர்ந்துள்ள புதரை சுத்தம் செய்ய வேண்டும்.

- ராமகிருஷ்ணன், பாலாஜி நகர்.

சாக்கடையில் ஓட்டல் கழிவு பீளமேடு புதுார், அவிநாசி ரோட்டில் உள்ள ஓட்டல் ஒன்று, உணவுக்கழிவுகளை ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்புறம் உள்ள சாக்கடையில் தினமும் கொட்டுகிறது. சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுகிறது. புகார் செய்தும் சம்பந்தப்பட்ட ஓட்டல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

- சுப்பையா நாயுடு, பீளமேடு புதுார்.

மின்விபத்து அபாயம் கோவை மத்திய மண்டலம், 84வது வார்டு, ஆல்வின் நகர், 6ம் நம்பர் கம்பத்தில், ஒயர்கள் தாழ்வாக தொங்கிக் கொண்டுள்ளன. கனரக வாகனங்கள் செல்லும்போது வாகனங்களில் உரசுகிறது. மின்விபத்து அபாயம் உள்ளது.

- ஜார்ஜ், ஆல்வின் நகர்.

கழிவு அகற்றுவதில்லை நீலிக்கோணாம்பாளையம், ஜெயா நகர், முதல் வீதியில், சாக்கடை கால்வாயை சுத்தம் செய்து, கழிவுகளை சாலையில் போட்டு விடுகின்றனர். அதிகாரிகளிடம் கேட்டால், சாக்கடையை சுத்தம் செய்வோம், கழிவுகளை அகற்ற முடியாது என தெரிவிக்கின்றனர். நாள்கணக்கில் தேங்கியிருக்கும் கழிவுகள் இறுகி மண்மேடு போல் ஆகிவிட்டது. இதில், புதரும் வளர்ந்து, கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.

- கயல்விழி, ஜெயா நகர்.

உடைந்த மூடியால் அபாயம் கோவை மாநகராட்சி, 88வது வார்டு, திருமாங்கல்யா கார்டனில், பாதாள சாக்கடை மூடி சேதமடைந்த நிலையில் உள்ளது. சரியாக மூடாததால், யாரேனும் கால் வைத்தால் விழும் வாய்ப்புள்ளது. மூன்று மாதமாக புகார் செய்தும் நடவடிக்கையில்லை.

- செல்வி, திருமாங்கல்யா கார்டன்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us