/புகார் பெட்டி /செங்கல்பட்டு/சாலையில் நிறுத்தும் வாகனங்களால் அவதி சாலையில் நிறுத்தும் வாகனங்களால் அவதி
சாலையில் நிறுத்தும் வாகனங்களால் அவதி
சாலையில் நிறுத்தும் வாகனங்களால் அவதி
சாலையில் நிறுத்தும் வாகனங்களால் அவதி
ADDED : செப் 09, 2025 08:37 AM

சி ங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் செல்லும் ஸ்டேஷன் தெருவில், தபால் அலுவலகம் மற்றும் முருகன் கோவில் உள்ளது. இப்பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கான தனி இடவசதி இல்லை.
தபால் அலுவலகம் வருவோர் மற்றும் பக்தர்கள், தங்களின் இருசக்கர வாகனங்களை தபால் நிலையத்தின் நுழைவு பகுதியில் சாலையில் நிறுத்துகின்றனர்.
இதனால் ரயில் நிலையம் செல்லும் பயணியர் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர். சுகுமாரன், சிங்கபெருமாள் கோவில்.