/புகார் பெட்டி /செங்கல்பட்டு/செங்கல்பட்டு: புகார் பெட்டி: ஏரிக்கரையில் பனை மரத்தை அகற்றுவதை தடுக்க கோரிக்கை:செங்கல்பட்டு: புகார் பெட்டி: ஏரிக்கரையில் பனை மரத்தை அகற்றுவதை தடுக்க கோரிக்கை:
செங்கல்பட்டு: புகார் பெட்டி: ஏரிக்கரையில் பனை மரத்தை அகற்றுவதை தடுக்க கோரிக்கை:
செங்கல்பட்டு: புகார் பெட்டி: ஏரிக்கரையில் பனை மரத்தை அகற்றுவதை தடுக்க கோரிக்கை:
செங்கல்பட்டு: புகார் பெட்டி: ஏரிக்கரையில் பனை மரத்தை அகற்றுவதை தடுக்க கோரிக்கை:
ADDED : மார் 20, 2025 01:44 AM

ஏரிக்கரையில் பனை மரத்தை அகற்றுவதை தடுக்க கோரிக்கை:
திருப்போரூர் வட்டம், பட்டிபுலம் கிராமத்தில், பெரிய தாங்கல் ஏரி உள்ளது. தற்போது இந்த ஏரிக்கரையில், பாதை அமைக்கும் பணி,'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, கரைக்கு அரணாக இருந்த பல பனைமரங்கள், ஆலமரம் மற்றும் இதர மரங்கள் என, ஏராளமான மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டுள்ளன.
உயரமான ஏரிக்கரையை, சாலை அமைக்கும் நோக்கத்திற்காக சமன்படுத்துவதாக நினைத்து, தாழ்வாக மாற்றியுள்ளனர். இதனால் மழைக் காலத்தில் தாங்கல் ஏரிக்கரை உடையும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.
ஏரியின் உள்பக்கம் துார் வாரி கரையை உயர்த்த வேண்டுமே தவிர, கரையில் இருக்கும் மரங்களை பிடுங்கக் கூடாது. எனவே, மரங்கள் பிடுங்கப்படுவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.கிருஷ்ணமூர்த்தி,
பட்டிபுலம்.