/தினம் தினம்/சொல்கிறார்கள்/ கோடி ரூபாய்க்கு குறைவில்லாத 'டர்ன் ஓவர்!' கோடி ரூபாய்க்கு குறைவில்லாத 'டர்ன் ஓவர்!'
கோடி ரூபாய்க்கு குறைவில்லாத 'டர்ன் ஓவர்!'
கோடி ரூபாய்க்கு குறைவில்லாத 'டர்ன் ஓவர்!'
கோடி ரூபாய்க்கு குறைவில்லாத 'டர்ன் ஓவர்!'
PUBLISHED ON : ஜூன் 14, 2025 12:00 AM

வேலுாரில், 'ஸ்ரீ மெமென்டோஸ்' என்ற பெயரில் விருது கோப்பைகள், பதக்கங்கள் விற்பனையகம் நடத்தி வரும், வினோத் கண்ணன்: வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு தான் என் சொந்த ஊர். குடும்பம் மிக வறுமையில் இருந்தது.
அரசு பள்ளியில் பிளஸ் 2 வரை படித்தேன். மேற்படிப்பு படிக்க வசதி இல்லாததால், சென்னைக்கு சென்றேன்.
எழும்பூரில் எஸ்.டி.டி., பூத்தில் இரவு பணி செய்தபடியே, வணிகம் சார்ந்த இளங்கலை படிப்பு முடித்தேன். டிகிரி முடித்தபின் தனியார் வங்கியில் வேலை கிடைத்தது. படிப்படியாக பதவி உயர்வு பெற்றதும், சொந்தமாக தொழில் துவங்கும் ஆர்வம் வந்தது.
அதனால் சொந்த ஊரிலேயே, குழந்தைகளுக்கு மனக்கணக்கு பயிற்சி அளிக்கும், 'அலமா அபாகஸ்' கல்வி நிறுவனத்தை 2009ல் துவங்கினேன்.
அதன்பின், ஸ்ரீபுரத்தில் உள்ள நாராயணி பள்ளி ஒன்றில், மாலைநேர டியூஷன் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறப்பான பயிற்சி வழங்கினோம். அதன்பின், 70 பள்ளிகள் வரை எங்களின் பயிற்சி வகுப்புகளை விரிவுபடுத்தி வெற்றி கண்டேன்.
என் நிறுவனத்தில், 150க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகின்றனர். இத்தனை பள்ளிகளிலும் கிடைத்த தொடர்புதான், கோப்பை உற்பத்தியாளராக என்னை மாற்றியது.
வேலுார் மட்டுமல்லாமல், சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்தும்கூட, விருது கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் வாங்குவதற்காக சென்னைக்கு தான் சென்று கொண்டிருந்தனர்.
அங்கு அதிக விலை, போக்குவரத்து செலவு, சரியான நேரத்தில் அவற்றை பள்ளிகளுக்கு கொண்டு வருவதில் ஏற்பட்ட சிரமங்களை பார்த்து தெரிந்து கொண்டேன்.
இந்த தொழிலை நாம் செய்தால் குறைந்த விலைக்கே கொடுக்க முடியும் என்று நம்பினேன். அந்த நம்பிக்கையில், 2013ல் துவங்கப்பட்டதுதான், ஸ்ரீ மெமென்டோஸ் விற்பனையகம்.
நிறுவன பரிசுகள், அலங்காரப் பொருட்கள், கீ செயின்கள், விளையாட்டு கோப்பை என, பல உற்பத்தியிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். உற்பத்திக்கான மூலப்பொருள் பாகங்களை, வடமாநிலங்களில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்கிறேன்.
இங்கு, 'அசெம்பிள்' செய்வதற்காக ஒரு திருமண மண்டபத்தையும் வாடகைக்கு எடுத்து வைத்திருக்கிறேன். கடுமையான உழைப்பு, திட்டமிடலால் இன்று ஆண்டுக்கு கோடி ரூபாய்க்கு குறைவில்லாத, 'டர்ன் ஓவர்' பார்க்கிறேன்.
மொத்தமாக எவ்வளவு கேட்டாலும், எந்த மாதிரி கேட்டாலும், 'கஸ்டமைஸ்' செய்து உடனே தர முடியும் என்பதால்தான், என்னால் இந்த உயரத்தை எட்ட முடிந்தது.
இந்த பிசினசில் முக்கியமானது ஒன்றே ஒன்றுதான்... அது, உங்களின் தொடர்பு வட்டாரம் அதிகமாக இருக்க வேண்டும்.