/தினம் தினம்/சொல்கிறார்கள்/ தொழில் துவங்க படிப்போ, வயதோ தடையில்லை!எங்கள் தயாரிப்புகள் 400 ரூபாய் முதல் கிடைக்கும்! தொழில் துவங்க படிப்போ, வயதோ தடையில்லை!எங்கள் தயாரிப்புகள் 400 ரூபாய் முதல் கிடைக்கும்!
தொழில் துவங்க படிப்போ, வயதோ தடையில்லை!எங்கள் தயாரிப்புகள் 400 ரூபாய் முதல் கிடைக்கும்!
தொழில் துவங்க படிப்போ, வயதோ தடையில்லை!எங்கள் தயாரிப்புகள் 400 ரூபாய் முதல் கிடைக்கும்!
தொழில் துவங்க படிப்போ, வயதோ தடையில்லை!எங்கள் தயாரிப்புகள் 400 ரூபாய் முதல் கிடைக்கும்!
PUBLISHED ON : செப் 14, 2025 12:00 AM

'ரோஜா மகளிர் சுயஉதவி குழு ' வாயிலாக, சோப், ஷாம்பு, ஹேர் ஆயில், சிறுதானிய உணவு பொருட்களை தயாரித்து, மாதம், 1.50 லட்சம் ரூபாய், 'டர்ன் ஓவர்' செய்து வரும் திருச்சியைச் சேர்ந்த லதா:
நான் எட்டாம் வகுப்பு தான் படிச்சிருக்கேன். உறவினருடன் திருமணம், மகன் என்று வாழ்க்கை நகர்ந்தது.
கொரோனா கால கட்டத்தில் கேரட், பீட்ரூட்டில் ஒரு பெண் சோப் தயாரித்து காட்டியதை பார்த்து, ஆர்வமாகி கற்றுக் கொண்டேன்.
குப்பைமேனி இலை, வேப்பிலையில் நான் செய்த சோப்பை, தெரிந்த பெண்களுக்கு கொடுத்தபோது, 'ரொம்ப நல்லா இருக்கு' என்றனர்.
தமிழக அரசின் மகளிர் திட்டம் வாயிலாக சோப் தயாரிக்கவும், சிறுதானிய சத்துமாவு தயாரிக்கவும், 15 நாட்கள் பயிற்சி எடுத்துக் கொண்டேன். என் தயாரிப்புகளுக்கும், நிறுவனத்திற்கும், ரோஜா மகளிர் சுயஉதவி குழு என்று பெயர் வைத்தேன்.
அரசு மகளிர் திட்ட அதிகாரிகள் என் முயற்சியை ஊக்குவித்தனர். ஒருமுறை சென்னையில், 'கோடை கொண்டாட்டம்' என்ற பெயரில் மகளிர் திட்டம் ஏற்பாடு செய்த, 18 நாட்கள் நிகழ்வில் ஸ்டால் போட அழைத்தனர். ஒவ்வொரு சோப் வகையிலும், 50 எடுத்து சென்றேன்.
இரண்டாவது நாளே அத்தனை சோப்புகளும் விற்றுவிட, புரொடக் ஷன் யூனிட்டுக்கு தகவல் சொல்லி, சோப்புகளை தயாரித்து, ஒருநாள் விட்டு ஒருநாள் இரவு பஸ்சில் அனுப்ப சொல்லி விற்றதில், 18 நாட்களில், 1.60 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.
'அதிக பொருட் களை விற்பனை செய்த நிறுவனம்' என, எங்களுக்கு சான்றிதழ் கொடுத்தனர்.
தமி ழகம் மட்டுமின்றி, பல மாநிலங்களில் இருந்தும், எங்கள் தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் வாங்குகின்றனர். துபாயை ச் சேர்ந்த ஒரு பெண், எங்கள் தயாரிப்பான குப்பைமேனி சோப்பை மொத்தமாக வா ங்கி, அங்கு விற்பனை செய்கிறார்.
இப்போது, 1,000 தொடர் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். தமிழகம் முழுக்க, 57 சிறு வியாபாரிகள் உள்ளனர்.
மாதம், 10,000 சோப்புகள், 2,000 திரவ சோப் பாட்டில்கள், 2,000 ஷாம்புகள், 100 தைல பாட்டில்கள், 5,000 சிறுதானிய உருண்டைகள், பருப்பு பொடி, இட்லி பொடி பாக்கெட்டுகள் தலா, 1,000, 2,000 சிறுதானிய சத்து மாவு பாக்கெட்டுகள் விற்பனையாகி ன்றன.
ஆரம்பத்தில், 5,000 ரூபாய் முதலீட்டில் இந்த தொழிலை துவங்கினேன். தற்போது எங்கள் பஞ்சாயத்தில் இருக்கும், 58 குழுக்களை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை தரும் அளவுக்கு தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் இருக்கிறேன்.
படிப்போ, வயதோ தடையில்லை. நம்மால் முடியும் என்று நம்பிக்கை வைத்தால், முடியும்!
தொடர்புக்கு:
93635 35431.
எங்கள் தயாரிப்புகள் 400 ரூபாய் முதல் கிடைக்கும்!
சுற்றுச்சூழல் மாசை குறைக்கும் வகையில், துணிகளுக்கு இயற்கையான சாயங்களை பயன்படுத்தும், 'எக்கோ பிரின்டிங்' துறையில் கால் பதித்துள்ள கோவையைச் சேர்ந்த கார்த்திகா:
நான் பிறந்து வளர்ந்தது சேலம் மாவட்டம், ஆத்துார். கோவையில்,
எம்.பி.ஏ., முடித்து, 'பேஷன் டிசைனிங்'கில் டிப்ளமோ முடித்தேன். அதிக
மாசுபாட்டை ஏற்படுத்தும் துறைகளில், டெக்ஸ்டைல் துறையும் ஒன்று. அதனால்,
சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆடைகளை தயாரிக்க வேண்டும் என்று தோன்றியது.
பே ஷன் டிசைனிங் படிக்கும்போதே, மூங்கில், பருத்தி, சணல் மாதிரியான
இயற்கையான பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட துணிகளில், ஆறு விதமான
ஆடைகளை வடிவமைத்து, அந்த துணிகளை ஒரு கைத்தறி நெசவாளரிடம் கொடுத்து
இயற்கையான வண்ணங்களில், சாயமே ற்றி வாங்கினேன்.
நான் வடிவமைத்த அந்த ஆடைகளுக்கு வரவேற்பு கிடைக்கவும், என் தன்னம்பிக்கை அதிகரித்தது.
என் நண்பர் தரணீஷுக்கும், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பிசினஸ் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது.
நான் இயற்கையாக செய்து வைத்திருந்த சாம்பிள் துணிகளை எல்லாம் பார்த்து
விட்டு, 'ஏன் இதையே நாம் பிசினசாக செய்யக்கூடாது?' என்று கேட்டார்.
இரண்டு ஆண்டுகள் இதுகுறித்து தேடி தேடி கற்று கொண்டோம். தரணீஷ், அவரது
ஐ.டி., வேலையை விட்டுவிட்டு, இதிலேயே முழு மூச்சாக இறங்கினார்.
கோவை பக்கத்தில் இருக்கிற பூலுவாபட்டியில், கடந்தாண்டு, 'பிரக்ன வஸ்திரா எக்கோ டெக்ஸ்டைல்ஸ்' நிறுவனத்தை துவக்கினோம்.
துணிகளில் நிறங்களை கொண்டு வருவதற்கு மரப்பட்டை, வேர்கள், இலை, பூ, சில
மரங்களின் காய்களை அச்சு மாதிரி பயன்படுத்தி, துணிகளில் டிசைன்களை பிரின்ட்
செய்கிறோம். கைகளால் வரைகிற கலம்காரி டிசைன், பிளாக் பிரின்டிங்கும்
செய்கிறோம்.
புடவை, டாப், துப்பட்டா, பேன்ட்கள், துண்டு, டி
ஷர்ட், ஷர்ட் எல்லாம் தயாரிக்கிறோம். எங்கள் தயாரிப்புகள், 400 ரூபாய்
முதல் கிடைக்கும்.
எக்கோ பிரின்டிங்கை பொறுத்த வரை, ஒரே நேரத்தில்
அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய முடியாது; மூலப் பொருட்களுக்கான
விலையும் அதிகம்.
நேர டியாக, மக்களிடம் நாங்களே விற்பனை செய்யும்
போது தான், விலை குறைவாக கொடுக்க முடியும். தற்போது, ஆன்லைனில் தான்
ஆர்டர்கள் எடுத்து நேரடியாக டெலிவரி செய்கிறோம். மாதத்திற்கு, 40,000
ரூபாய் லாபம் கிடைக்கிறது. எங்களை நிரூபி க்க நாங்கள் செல்ல வேண்டிய துாரம்
இன்னும் இருக்கிறது.
இதை வெற்றிகரமான பிசினஸ் மாடலாக மாற்றிக்
காட்ட வேண்டும். அப்போது தான், பலர் இயற் கையான தயாரிப்புகளுக்கு
திரும்புவர். நிறைய பெண் நெசவாளர்களையும் இதில் கொண்டு வர வேண்டும்.
தொடர்புக்கு:
82483 09201.