Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/சொல்கிறார்கள்/ பேரிக்காயால் லாபம் சம்பாதிக்கிறேன்!

 பேரிக்காயால் லாபம் சம்பாதிக்கிறேன்!

 பேரிக்காயால் லாபம் சம்பாதிக்கிறேன்!

 பேரிக்காயால் லாபம் சம்பாதிக்கிறேன்!

PUBLISHED ON : டிச 01, 2025 01:16 AM


Google News
Latest Tamil News
மலைப் பிரதேசத்தில் மட்டுமே விளையும் பேரிக்காயை, இயற்கை விவசாயத்தில் பயிர் செய்து வரும், கொடைக்கானலை சேர்ந்த, விவசாயி கே.எம்.பெருமாள்: எங்களுக்கு பூர்வீகம், திருப்பூர் மாவட்டம், காங்கேயம். திப்பு சுல்தான் ஆட்சி காலத்திலேயே எங்கள் மூதாதையர், இங்கே குடியேறியதாக சொல்வர்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட ராணுவ குடியிருப்பில், தோட்டங்களை பராமரிக்கும் வேலைகளில் எங்கள் மூதாதையர் இருந்தனர். அப்படித் தான், ஆங்கிலேயர்கள் வெளிநாடுகளில் இருந்து எடுத்து வந்த பழப்பயிர்களை வளர்த்து கொடுத்தனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின், எங்கள் தாத்தா காலத்தில், இந்த நிலத்தை வாங்கி, பழப்பயிர் சாகுபடி துவங்கினர். அதை சிறு வயதில் இருந்தே பார்த்து வளர்ந்ததால், பேரிக்காய், பிளம்ஸ் போன்ற பழப்பயிர்கள் சாகுபடியில் எனக்கு அனுபவம் உள்ளது.

அந்த வகையில், 6 ஏக்கரில் பேரிக்காய், 2 ஏக்கரில் பிளம்ஸ் பழங்கள் சாகுபடி செய்கிறோம். ஆப்பிள் குடும்பத்தை சேர்ந்தது, பேரிக்காய். நாங்கள் போட்டிருப்பது, நாட்டு பேரிக்காய் தான்.

ஜூன் மாதம் பிற்பகுதியில் அறுவடை துவங்கி, அக்டோபர் மாதம் வரைக்கும் போகும். பேரிக்காயை பச்சையாகவே அப்படியே கடித்து சாப்பிட்டால், பற்கள் சுத்தமாவதுடன், உறுதியாகவும் இருக்கும். பொதுவாக, பேரிக்காயை சாப்பிடுவோருக்கு உடல் புத்துணர்ச்சி கிடைக்கும்.

தமிழகத்தை விட, கேரள மாநிலத்தில், பேரிக்காயை விரும்பி சாப்பிடுவர். தமிழகத்தில் பேரிக்காய்க்கு உப்பு, காரம் போட்டு சாப்பிடும் பழக்கம் உண்டு. கேரளாவில் பேரிக்காயில், 'ஜாம்' தடவி சாப்பிடுவர். கொடைக்கானலில் விளையும் பேரிக்காய், கேரளாவுக்கு பெருமளவில் செல்கிறது.

நாம் என்ன தான் பராமரித்தாலும், பேரிக்காய் நல்ல மகசூல் கிடைக்க, சீதோஷ்ண நிலை மிக முக்கியம். குளிரும், போதுமான மழையும் அவசியம். அதுவும் காய்க்கும் போது, அதிக குளிர் இருக்க வேண்டும்.

வெயில் அதிகமாக அடித்தால், பழங்களில் ஈக்களின் தாக்குதல் வரும்; நீர்ச்சத்தும் குறைந்து விடும். நீர்ச்சத்து குறைந்தால், அப்படியே வதங்கி, மரத்திலிருந்து விழுந்து விடும். விளக்குப்பொறி வைத்தால், ஓரளவுக்கு ஈக்களின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

இங்குள்ள, 6 ஏக்கரில், மொத்தம், 500 மரங்கள் உள்ளன. இந்தாண்டு, பழ ஈக்களின் தாக்குதலால், கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. நன்றாக காய்க்கும், 200 மரங்களில் இருந்து, ஒரு மரத்துக்கு, 20 கிலோ கணக்கில், 4,000 கிலோ மட்டும் மகசூல் கிடைத்தது.

அதன் வாயிலாக, இந்தாண்டு, 2.80 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது; அனைத்து செலவுகளும் போக, 2 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது.

இந்த பழச்சாகுபடியே என்னை பலருக்கும் அறிமுகப்படுத்தி உள்ளது. என் தோட்டத்தை பலர் வந்து பார்த்து செல்வர். பழச்சாகுபடிக்கு கவனிப்பு மிக அவசியம். அது இருந்தால், நன்றாக லாபம் பார்க்க முடியும்!

தொடர்புக்கு:

98652 27087





      Our Apps Available On




      Dinamalar

      Follow us