Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/சொல்கிறார்கள்/ பெரியவளாகி 'மிஸ் வேர்ல்டு' ஆகணும்!-

பெரியவளாகி 'மிஸ் வேர்ல்டு' ஆகணும்!-

பெரியவளாகி 'மிஸ் வேர்ல்டு' ஆகணும்!-

பெரியவளாகி 'மிஸ் வேர்ல்டு' ஆகணும்!-

PUBLISHED ON : செப் 19, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
மதுரையை அடுத்த குலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஜஸ்டினா குளோரி என்ற, 8 வயது சிறுமி, 'மாடலிங்' உலகில் கலக்கி வருகிறார். சர்வ தேச நிகழ்வுகளிலும் பங்கேற்று அசத்தும் ஜஸ்டினா குறித்து, அவரது அம்மா சிக்கந்தர் ஜுனைத்தா: ஜஸ்டினா வுக்கு, 4 வயசு இருக்கும்போது மதுரை தெப்பக் குளத்துல நடந்த மாறுவேடப் போட்டியில், 'மிஸ் வேர்ல்டு' மாதிரி வேடம் போட்டு கலந்துக்கிட்டா. நானே மேக்கப் போட்டு, கூட்டிட்டு போனேன்.

முதல் மேடைன்னாலும் ஜஸ்டினா எந்த பயமும் இல்லாம, 'புரொபஷனல் மாடல்' மாதிரி, 'கேட்வாக்' பண்ணினா. அதுக்கப்புறம் தான் இந்த துறையில் குழந்தையை ஈடுபடுத்த முடிவு செய்தோம். மதுரையில் நடந்த பேஷன் ஷோ பயிலரங்கத்துக்கு கூட்டிட்டு போனோம்.

ஜஸ்டினாகூட இருந்து நான் தான் பயிற்சியை, 'அட்டென்ட்' செய்தேன்.

வீட்டுக்கு வந்து அவளுக்கு புரிகிற மாதிரி சொல்லி கொடுப்பேன். 2023ம் ஆண்டு திருச்சியில் நடந்த, 'பேஷன் ஈவென்ட்' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றாள். எல்லா வயதினரும் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில், 'ரேம்ப் வாக்' செய்து, 'ஷைனிங் ஸ்டார்' விருது வாங்கினாள்.

முறையா பயிற்சி எடுத்ததால் கோவை, சென்னை, மதுரை என பல இடங்களில் நடந்த பேஷன் ஷோவில் கலந்து கொண்டு ரேம்ப் வாக் செய்தாள். 2024ம் ஆண்டு துபாயில் நடந்த நிகழ்ச்சியில், ஒரு பிராண்டுக்கான ஆடைகளை அணிந்து ரேம்ப் வாக் செய்தாள்.

சென்னையில் நடந்த ஒரு பேஷன் ஷோவில், ஜஸ்டினா வுக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. மலேஷியாவில் நடந்த, 'உலக ஜூனியர் டூரிசம் அம்பாசிடர் 2025' என்ற சர்வதேச போட்டியில் கலந்து கொண்டு, சிறந்த தேசிய ஆடை பிரிவில் விருது வாங்கினாள்.

இப்ப, நாலாம் வகுப்பு படிக்கிறாள். குழந்தையோட மாடலிங் ஆர்வத்துக்கு ஸ்கூல்லயும் ஆதரவு கொடுக்குறாங்க.

வெற்றி, தோல்வி களை புரிஞ்சுக்க முடியாத வயது ஜஸ்டினாவுக்கு என்பதால், அதையெல்லாம் சொல்லி குழந்தையை கஷ்டப்படுத்தாம, நடக்கிறதெல்லாம் அனுபவமா ஆகட்டும்னு விட்டுருவோம்.

குழந்தை ஒல்லியா இருக்கிறதால, சில விளம்பரங்களில் நடிக்கிற வாய்ப்புகளும் கை நழுவி போயின. 'குழந்தையை வெயிட் போட வைங்க'ன்னு சிலர் அட்வைஸ் செய்தாங்க. ஆனா, என் பொண்ணு ஆரோக்கியமா இருக்கா.

ஒல்லியா இருக்கிறது அவளுடைய மரபணு சார்ந்த விஷயமா கூட இருக்கலாம். அதனால், வெயிட் போட வைக்கிற முயற்சியெல்லாம் பண்றதில்ல. அவளுக்கு இருக்கிற திறமைகளை மட்டும் தான் நாங்க பார்க்கிறோம்.

ஜஸ்டினா குளோரி: இதுவரை ரேம்ப் வாக் செய்து, ஏழு விருதுகள் வென்றிருக்கிறேன். நான் பெரியவளாகி, 'மிஸ் வேர்ல்டு' ஆகணும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us