/தினம் தினம்/சொல்கிறார்கள்/ வருவாயில் விவசாயிகளுக்கு 55% கொடுக்கிறேன்! வருவாயில் விவசாயிகளுக்கு 55% கொடுக்கிறேன்!
வருவாயில் விவசாயிகளுக்கு 55% கொடுக்கிறேன்!
வருவாயில் விவசாயிகளுக்கு 55% கொடுக்கிறேன்!
வருவாயில் விவசாயிகளுக்கு 55% கொடுக்கிறேன்!
PUBLISHED ON : செப் 11, 2025 12:00 AM

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தினமும், 10,000 வீடுகளுக்கு பதப்படுத்தாத பசும்பால் சப்ளை செய்து வரும், சென்னை மேடவாக்கத்தில் உள்ள, 'உழவர் பூமி' நிறுவனத்தின் தலைவர் வெற்றிவேல் பழனி:
இரவு நேர வேலை பார்த்தபடியே, பி.சி.ஏ., படித்து முடித்தேன். 'ஜோகோ' நிறுவனத்தில் வேலை கிடைத்தது. 2017ல் ஜல்லிக்கட்டு போராட்டம் ஆரம்பமானது. பொழுதுபோக்காகத் தான் அங்கு சென்றேன்.
அங்கு பேசப்பட்ட விஷயங்கள், கிடைத்த அனுபவங்கள் எல்லாம், விவசாயிகளுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.
பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை, நுகர்வோருக்கு தரமான, பதப்படுத்தாத பசும்பால், பிளாஸ்டிக் பயன்பாடே கூடாது என்ற இந்த மூன்று விஷயங்களையும் இலக்காக வைத்து, வேலையை ஆரம்பித்தேன். இரண்டாண்டுகள் ஊர் ஊராக சுற்றி நிறைய கற்றுக் கொண்டேன்.
மாதம், 1 லட்சம் ரூபாய் சம்பளம் தந்த ஜோகோ வேலையை விட்டேன். உற்பத்தியாளர்களிடம் பால் வாங்கி, 'சுத்தமான பசும்பால்' என, ஒவ்வொரு அபார்ட்மென்டாக சென்று விற்றேன். சிலர் ஆர்டர் தந்தனர்.
ஐந்து மாதங்களில், 300 லிட்டர் வரை விற்பனை விரிவடைந்தது. அதேநேரம், 'கூலிங்' போதாமல் பால் கெட்டு போவதாக புகார்களும் வந்தன.
நண்பர் ஒருவர், 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய முன்வந்தார். அதை வைத்து, 2018ல் மதுராந்தகத்தில் பால் கொள்முதல் நிறுவனம் அமைத்தேன். அப்பகுதி விவசாயிகளிடம் கொள்முதல் செய்து, அந்தாண்டு முடிவதற்குள்ளேயே, 1,000 லிட்டர் டெலிவரி செய்ய துவங்கி விட்டோம்.
அடுத்து பால் பரிசோதனைக் கூடம் திறந்தேன். ஒரு கூலிங் வாகனம் வாங்கினேன். இந்த சூழலில் தான் கொரோனா ஊரடங்கு வந்தது. ஆனால், அது எங்களுக்கு மிகப்பெரிய வளர்ச்சியை கொடுத்தது. 40ல் இருந்து, 80 ஏரியாவுக்கு வியாபாரம் விரிவடைந்தது.
தற்போது சென்னையிலும், அதைச் சுற்றியிருக்கும் மாவட்டங்களிலும், 140 பகுதிகளில் எங்கள் பால் தான் விற்பனையாகிறது. எவ்வளவு தேவை இருக்கிறதோ, அவ்வளவு பால் மட்டும் கொள்முதல் செய்வோம். எங்கள் வருவாயில், 55 சதவீதத்தை விவசாயிகளுக்கு தருகிறோம்.
தற்போது சென்னையில், 40 இடங்களில் சேமிப்பு வசதி இருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு காலை, 7:00 மணிக்குள் எங்கள் பால் கிடைத்துவிடும். தரமான, சுத்தமான பசும்பாலை மக்கள் கையில் கொண்டு போய் சேர்க்கிறோம்.
அத்துடன் பலருக்கும் வேலை கொடுக்க முடிஞ்சிருக்கு. ஜல்லிக்கட்டு போராட்டத்தால் ஏற்பட்ட நல்ல விளைவுகளில் இதுவும் ஒன்று!
தொடர்புக்கு:
89399 89887