/தினம் தினம்/சொல்கிறார்கள்/ 'இன்டர்நேஷனல்' அளவுக்கு செல்வதே அடுத்த இலக்கு! 'இன்டர்நேஷனல்' அளவுக்கு செல்வதே அடுத்த இலக்கு!
'இன்டர்நேஷனல்' அளவுக்கு செல்வதே அடுத்த இலக்கு!
'இன்டர்நேஷனல்' அளவுக்கு செல்வதே அடுத்த இலக்கு!
'இன்டர்நேஷனல்' அளவுக்கு செல்வதே அடுத்த இலக்கு!
PUBLISHED ON : ஜூலை 06, 2024 12:00 AM

'பெட்டல்ஸ் அண்டு டிரேப்ஸ்' என்ற பெயரில் சென்னையில், ஈவென்ட் மேனேஜ்மென்ட் மற்றும் மேடை அலங்காரங்களை செய்து தரும் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான சவுமியா ராஜாஜி:
அமெரிக்காவில், 'ஹாஸ்பிட்டாலிட்டி அண்டு மேனேஜ்மென்ட் கோர்ஸ்' படித்தேன். அதில் ஈவென்ட் மேனேஜ்மென்ட் பிரிவில் ஸ்பெஷலைஸ் செய்தேன்.
அமெரிக்காவில் சில ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனிகளில் வேலை பார்த்துவிட்டு, இந்தியா வந்தேன். அப்போது தான் நண்பர்கள் வாயிலாக, சக்தியோட அறிமுகம் கிடைத்தது.
சக்திக்கு ஏற்கனவே டெக்கரேஷன் துறையில், ஏழு ஆண்டுகள் அனுபவம் இருந்தது. இருவருக்குமே ஒரே துறையில் ஆர்வம் இருந்ததால், பேசி பேசி துவங்கியதுதான், பெட்டல் அண்டு டிரேப்ஸ்.
எங்கள் இருவருக்குமே பிசினஸை சீக்கிரம் வளர்த்தெடுக்கணும், வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயரை சம்பாதிக்கணும் என்பது தான் நோக்கம்.
திருமணம் என்கிற நிகழ்வை ஒவ்வொருவரும் வாழ்நாள் ஞாபகமாக பாதுகாக்க நினைக்கின்றனர். திருமண மேடை எப்படியிருக்க வேண்டும் என பல ஐடியாக்களுடன் எங்களை அணுகுவர்.
அப்படி வரும்போது, அவர்களின் திருமண உடைகளையும் கணக்கில் வைத்துதான் அரங்கத்தை கஸ்டமைஸ்டாக டிசைன் செய்து தருகிறோம்.
அவர்கள் எங்கே, எப்படி சந்தித்தனர், மணமகன், மணமகளுக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என, கேட்டு தெரிந்து கொள்வோம். அதிலிருந்தும் எங்களுக்கான ஐடியாஸ் எடுப்போம். எங்களுடன் டிசைனர்ஸ், ஆர்கிடெக்ட்ஸ் என்று ஒரு பெரிய குழு இருக்கும்.
எங்களின் பெரிய சவாலே, நேரம் தான். நாங்கள் நடத்தும் ஈவென்ட்டுக்கு முன், அதே இடத்தில் வேற ஒரு ஈவென்ட் நடந்து கொண்டிருக்கும்.
அது முடிந்து, அடுத்த ஈவென்ட் துவங்க மிகவும் குறைவான நேரம் தான் இருக்கும். அதற்குள் எப்படி எல்லாவற்றையும், 'பிளான்' செய்து, அழகாக 'செட்' போடுவது என்பது தான் சவாலே!
செட்டுக்கான மெட்டீரியல் ரொம்ப வெயிட்டாகவும் இருக்கக் கூடாது; அதே சமயம் ஸ்ட்ராங்காகவும் இருக்க வேண்டும்.
தயாரான செட்டை ஒருமுறை நிறுத்தி வைத்து ஒத்திகை பார்த்து, அதன்பின் தான் ஈவென்ட் நடக்கும் இடத்தில் கொண்டு சென்று நிறுத்துவோம். அப்புறம் மேடையில் பூ அலங்காரம் முடித்து விட்டு, 'லைட்டிங்' செய்வோம்.
சம்பந்தப்பட்டோருக்கு அது ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் டே... அதனால், அதில் சிறு சொதப்பல் கூட வந்துவிடக் கூடாது என்பதால், குழுவில் உள்ள ஒவ்வொருவரும் மிகவும் கவனமாக இருப்போம்.
தற்போது இந்தியாவிற்குள் செய்து வரும் இந்த பிசினஸை, இன்டர்நேஷனல் லெவலில் எடுத்துச் செல்வது தான் எங்களது அடுத்த இலக்கு.