Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/சொல்கிறார்கள்/ காவிரி நீரை விட ஊருணி தண்ணீரே உதவியாக இருக்கு!

காவிரி நீரை விட ஊருணி தண்ணீரே உதவியாக இருக்கு!

காவிரி நீரை விட ஊருணி தண்ணீரே உதவியாக இருக்கு!

காவிரி நீரை விட ஊருணி தண்ணீரே உதவியாக இருக்கு!

PUBLISHED ON : ஜூன் 30, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
ராமநாதபுரத்தில் இருந்து, சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி அமைந்துள்ள, திருப்பாலைக்குடி ஊராட்சியின் விவசாய சங்க தலைவர் முனியாண்டி:

மொத்தம் 9 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து கிடக்கிற இந்த ஊருணி, மதுரை தல்லாகுளம் பகுதியை ஆண்ட தல்லம்மை என்ற அரசியால் ஏற்படுத்தப்பட்டதாகவும், அவரது பெயரிலேயே இந்த ஊருணி தல்லாகுளம் ஊருணி என அழைக்கப்படுவதாகவும், இந்த பகுதியில் நீண்டகாலமாக செவிவழி செய்தி இருக்குது.

விவசாய நிலங்களில் தேங்கிக் கிடக்கும் மழை நீரையும், சாலை உள்ளிட்ட பொது இடங்களில் தேங்கும் மழை நீரையும், வரத்து கால்வாய்கள் வாயிலாக இந்த ஊருணியில் கொண்டு வந்து தேக்குவது வழக்கம்.

காவிரி கூட்டு குடிநீரும், பிளாஸ்டிக் கேன் குடிநீரும் வருவதற்கு முன்னரே, இந்த ஊருணி தண்ணீர் தான் ஊர் மக்களோட தாகத்தையும், பிற தண்ணீர் தேவைகளையும் முழுமையாக தீர்த்துக்கிட்டு இருந்துச்சு.

இந்த ஊருணியோட தரை மட்டத்தில், 1 அடி தோண்டினாலே உப்பு தண்ணீர் வந்துரும். அதனால் தான், மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு, இந்த பகுதி மக்கள், பல தலைமுறைகளாக இந்த ஊருணியை ஆழப்படுத்தாம அப்படியே பயன்படுத்தி வருகிறோம்.

இதில் படிந்து கிடக்கும் வண்டலை மட்டும், சில ஆண்டுகளுக்கு ஒரு முறை ரொம்ப கவனமாக அப்புறப்படுத்துவோம். இங்கு சேகரிக்கப்படும் தண்ணீர், இங்குள்ள மக்களோட தாகத்தை மட்டுமல்ல... ஆடு, மாடுகளின் தாகத்தையும் தணிச்சுக்கிட்டு இருக்கு.

கால்நடைகள் இந்த ஊருணியில் இறங்கி, நேரடியாக தண்ணீர் குடிக்க அனுமதிக்குறதில்லை. குடங்களில் தண்ணீரை எடுத்துச் சென்று ஆடு, மாடுகளுக்கு கொடுப்போம்.

காவிரி கூட்டு குடிநீர் கிடைக்காத காலங்களில், இந்த பகுதி மக்களோட தாகத்தை தீர்க்குறதோட மட்டுமல்லாமல், சமையலுக்கு தேவையான தண்ணீரையும் கொடுக்கும் இந்த ஊருணியை, எங்க ஊர் மக்கள் தெய்வமாகக் கருதுகின்றனர்.

ஆண்டுக்கு ஐந்து மாதம் தண்ணீரில்லாமல் வறண்டு, தரையோடு தரையாகக் கிடக்கும் இந்த ஊருணியில், ஐப்பசி துவங்கி சித்திரை வரை மழை தண்ணீர் தேங்கிக் கிடக்கும்.

இதனால், அந்த மாதங்களில் எங்கள் ஊரில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது. இந்த தண்ணீரை குடங்களில் எடுத்துச் சென்று தெளிய வைத்து குடிநீருக்கும், சமையலுக்கும் பயன்படுத்துகிறோம்.

இது மட்டுமல்லாமல் குழந்தைகளை குளிப்பாட்டுவது துவங்கி, பிற தேவைகளுக்கும் இந்த ஊருணி தண்ணீர் உதவுகிறது. அதனால் தான், இந்த ஊருணியில் இறங்கி குளிக்கவோ, அசுத்தம் செய்யவோ அனுமதிக்காமல், பல தலைமுறைகளாக பாதுகாத்து வருகிறோம்.

இதை பாதுகாத்தால் தான், இந்த பகுதி மக்கள் நிம்மதியாக உயிர் வாழ முடியும். எப்போதாவது வரும் காவிரி தண்ணீரை விட, இந்த ஊருணி தண்ணீரே எல்லா வகையிலும் எங்களுக்கு உதவியாக இருக்கு.

தொழில் துவங்கிய 6 மாதங்களில் 70 வேலைகள் வந்துள்ளன!


சாலை போடும் இயந்திரங்கள் வாயிலாக, மாதம், 25 லட்சம் ரூபாய் வருமானம் பார்க்கும், கோவையைச் சேர்ந்த,

'ஆர்கஸ் என்டர்பிரைசஸ்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சத்யபாமா:எங்களுக்கு பூர்வீகம் பொள்ளாச்சி. ரொம்ப எளிமையான குடும்பம். திருமணத்திற்கு பின், கோவையில் வாழ்க்கை. கணவர்

கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.

நான் சிறிது நாள், தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்தேன். எம்.பி.ஏ., - ஹெச்.ஆர்., முடித்திருந்ததால், மனிதவளத்தை எப்படி பிசினசில் இணைக்கிறதுன்னு யோசித்தபடியே இருப்பேன்.கணவரோட கன்ஸ்ட்ரக் ஷன் துறையில் சாலை கட்டமைப்பு எவ்வளவு பெரிய நெட்வொர்க்கா இருக்கு, அதோட பிசினஸ் போன்ற விபரங்களை, அவர் சொல்ல கேட்ட போது, சாலை அமைக்கும் இயந்திரங்களை வாங்கி நாம் பிசினஸ் செய்தால் என்ன என்று தோன்றியது.

நான் முதல் தலைமுறை தொழில் முனைவோர் என்பதால், கணவர் தந்த ஆலோசனைகள் அஸ்திவாரமாக இருந்தன. இந்த துறையில் அவருக்கு இருந்த தொடர்புகளும் உதவியாக இருந்தன.

தொழில் துவங்கலாம் என முடிவு செய்து, வங்கிக் கடன், 44 லட்சம் ரூபாய், 16 லட்சம் ரூபாய் மானியம், இதோடு சேமிப்பு பணம் என, முதலீட்டுக்கு ஏற்பாடு செய்தோம்.

கணவர் ஏற்கனவே பதிவு செய்திருந்த ஒப்பந்ததாரர் என்பதால், இயந்திரங்களை வாங்கி வாடகைக்கு விடுவதுடன், சப் - கான்ட்ராக்டும் கொடுக்க முடிவு செய்தோம்.பீளமேட்டில் எங்கள் வீட்டின் முதல் மாடியில், 300 சதுர அடியில் தான் எங்கள் அலுவலகம் செயல்படுகிறது. நான்கு நிரந்தர ஊழியர்களும், தினக்கூலி அடிப்படையில், 15 ஊழியர்களும் பணி

புரிகின்றனர்.

இந்த பணியில் போக்குவரத்து தான் பெரிய சவால். இரண்டு இயந்திரங்களும் தலா, 10 டன் எடை. லாரிகளில் எடுத்து செல்ல வேண்டும். ஆனால், எல்லா இடங்களிலும் இறக்கிட முடியாது.இதற்கென ரேம்ப் அமைக்கப்பட்ட மையங்களில் தான் ஏற்றி, இறக்க முடியும். கோவையில் பணி நடக்குற பகுதிக்கு அருகில் அந்த வசதி எங்கு இருக்கு என, எங்களுக்கு தெரியும் என்பதால்

சமாளித்து விடுவோம்.

சாலை போடும்போது, வீல் ட்ராக் கூட இல்லாத வகையில் நேர்த்தியாக போடணும். திறன் வாய்ந்த ஊழியர்கள் இல்லை என்றால், சாலை மேடு, பள்ளமாக மாறி, சீக்கிரம் விரிசல் விழும். மழை, போக்குவரத்து கட்டுப்பாடு, சில நேரங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை என, இதில் இருக்கிற சவால்கள் மிகுதி. அவற்றை கடந்து தான் பிசினசை நடத்துகிறோம்.தற்போது, அண்டை மாநிலங்களில் இருந்தும் வாடகைக்கு கேட்கின்றனர். தொழில் துவங்கிய கடந்த நவம்பரில் இருந்து தற்போது வரை, 70 வேலைகள் வந்திருக்கு. இயந்திரங்களை வாடகைக்கு விடுவது, சப் - கான்ட்ராக்ட் என, மாதம் சராசரியாக, 25 லட்சம் ரூபாய்க்கு

பிசினஸ் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us