/தினம் தினம்/சொல்கிறார்கள்/ அசல் கலைஞர்களின் படைப்புகள் எல்லை தாண்டியும் அங்கீகாரம் பெறும்! அசல் கலைஞர்களின் படைப்புகள் எல்லை தாண்டியும் அங்கீகாரம் பெறும்!
அசல் கலைஞர்களின் படைப்புகள் எல்லை தாண்டியும் அங்கீகாரம் பெறும்!
அசல் கலைஞர்களின் படைப்புகள் எல்லை தாண்டியும் அங்கீகாரம் பெறும்!
அசல் கலைஞர்களின் படைப்புகள் எல்லை தாண்டியும் அங்கீகாரம் பெறும்!
PUBLISHED ON : ஜூன் 28, 2024 12:00 AM

இந்த வருட கான் திரைப்பட விழாவில், 'கிராண்ட் பிரிக்ஸ்' விருதை, ஆல் வி இமேஜின் ஆஸ் லைட் என்ற படத்துக்காக வென்ற இந்திய இயக்குநர் பாயல் கபாடியா:
---கடந்த 30 ஆண்டுகளில், கான் திரைப்பட விழாவின் முக்கிய போட்டி பிரிவில், இந்திய திரைப்படம் ஒன்று திரையிடப்பட்டது இதுவே முதல் முறை.
இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கும் நான் கடந்து வந்த பாதை, போராட்டங்கள் நிறைந்தது.
இன்று உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கும் என் மீது, இதே இந்தியாவில் ஒரு வழக்கு போடப்பட்டு, விசாரணையில் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? 'கோ டு பாகிஸ்தான், ஆன்டி இந்தியன்' போன்ற கோஷங்கள் எனக்கு எதிராகவும் முன்வைக்கப்பட்டன என்பதை ஏற்க முடிகிறதா?
கடந்த 2015ல் நான் படித்த புனே திரைப்படக் கல்லுாரியில் மாணவர் போராட்டம் ஒன்று வெடித்தது. 139 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்ட, 35 மாணவர்களில் ஒருவளாக நின்ற எனக்கு கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டது; படிப்பு தொடர்பாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்டது; என் மீது கல்லுாரியே வழக்கும் தொடர்ந்தது.
இப்போது நான் விருது பெற்றவுடன், 'இவர் எங்களின் பெருமை' என்பதாக கொண்டாட்டத்தில் இணையும் நம் அரசும், அந்த கல்லுாரி நிர்வாகமும் அன்று என் குரலை கேட்கவே முயற்சி எடுக்கவில்லை. 38 வயதான நான், 2021-ல், மாணவர்கள் சந்திக்கும் அரசியல் பிரச்னைகள் குறித்து, 'எ நைட் ஆப் நோவிங் நத்திங்' என்ற ஆவண படத்தை எடுத்தேன்.
கடந்த 2022-ல் இதே கான் திரைப்பட விழாவில், சிறந்த ஆவண படத்துக்கான விருதை அது வென்றது.
கனி குஸ்ருதி, திவ்யா பிரபா நடிப்பில் வெளியாகியிருக்கும் இந்த படம், செவிலியர் பணிக்காக கேரளாவிலிருந்து மும்பைக்கு புலம்பெயர்ந்த இரண்டு பெண்கள் சந்திக்கும் போராட்டங்கள் குறித்து பேசுகிறது.
இருப்பிட அரசியல், தனியுரிமை, தனி மனித சுதந்திரம், சுய மரியாதை, நகர்ப்புற மாற்றத்தால் குடிசை பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றுதல் என, பல பிரச்னைகளை தன் மையக் கதையோடு இணைத்து பேசுகிறது.
மும்பை போன்ற பெருநகரங்கள், சமூகத்தின் அனைத்து அடுக்கு மக்களுக்கும் அடைக்கலம் கொடுத்து பொருளாதார சுதந்திரம் அளிப்பது போல, பொது பல்கலைக்கழகங்களும் அனைத்து சமூக மக்களுக்கும் அறிவார்ந்த மற்றும் அடிப்படை சுதந்திரத்தை அளிக்கக்கூடிய இடமாக இருக்க வேண்டும் என்பதே நான் முன்வைக்கும் கோரிக்கை.
அசலான கலைஞர்களின் படைப்புகள், எல்லை தாண்டி சென்றும், அவர்களுக்கான அங்கீகாரத்தை பெற்று தரும் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி இருக்கிறது.