Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/சொல்கிறார்கள்/ வெளிநாடுகளில் இருந்தும் தொடர்ந்து 'ஆர்டர்' வருகிறது!

வெளிநாடுகளில் இருந்தும் தொடர்ந்து 'ஆர்டர்' வருகிறது!

வெளிநாடுகளில் இருந்தும் தொடர்ந்து 'ஆர்டர்' வருகிறது!

வெளிநாடுகளில் இருந்தும் தொடர்ந்து 'ஆர்டர்' வருகிறது!

PUBLISHED ON : ஜூலை 02, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
'ஹெர்பல் ஹேர் ஆயில்' பிசினஸில் களம் இறங்கியுள்ள, கவிஞர் சினேகன் மனைவி கன்னிகா:

சினிமாவில் மக்களோட அன்பு, பெயர், புகழ் எல்லாம் கிடைச்சாலும், அது நிரந்தர வருமானம் இல்லாத ஒரு தொழில். அதனால், ஒரு பிசினஸ் துவங்கணும் என்பது என் கணவரோட ரொம்ப நாள் ஆசை.

பிசினஸ் தொடர்பாக நிறைய ஐடியாக்கள் வந்தன. அவற்றில் ஒன்று தான், ஹெர்பல் தேங்காய் எண்ணெய் தயாரிப்பு.

என் சிறு வயதில் பாட்டியும், அம்மாவும் வீட்டிலேயே எண்ணெய் காய்ச்சி கொடுப்பாங்க. அந்த எண்ணெயால் தான் என் முடி நீளமாக, அடர்த்தியாக வளர்ந்தது. என்னை பார்க்கும் பலரும் என் கூந்தலை பற்றி விசாரிக்காமல் போனதில்லை.

நிறைய, 'ஹேர் கேர்' தயாரிப்பு நிறுவனங்கள் அவங்களோட பிராண்டுக்கு என்னை மாடலிங் செய்ய சொல்லி கேட்டிருக்காங்க. அப்போது தான் என் கூந்தல் எனக்கு எவ்வளவு பெரிய பலம்னு புரிந்தது.

பிசினஸ் துவங்கும்போது, தெரியாத ஒரு விஷயத்தில் இறங்குறதை விட, ஏற்கனவே தெரிந்த விஷயத்தை செய்யலாம் என்று தோன்றியது.

அதனால், ஹெர்பல் ஹேர் ஆயில் தயாரிப்பையே பிசினசாக மாற்ற முடிவு செய்தேன். நானும், என் கணவரும் சேர்ந்து, 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்து பிசினஸை துவங்கினோம்.

மக்களோட நம்பிக்கையை தக்க வைக்க தரம் ரொம்ப முக்கியம். அதுக்காக நிறைய மெனக்கெட்டோம். வாகை மரச்செக்கில் ஆட்டுற தேங்காய் எண்ணெயை வாங்கி, மூலிகைகள் சேர்த்து காய்ச்சி, விற்பனை செய்வது தான் எங்க பிசினஸ் ஐடியா.

எந்த செயற்கை நறுமண பொருட்களும் சேர்க்கக் கூடாதுன்னு உறுதியாக இருந்தோம். இந்த தயாரிப்புக்கு தேவையான மூலிகைகளை, தஞ்சாவூரில் எங்க தோட்டத்தில் இயற்கை முறையில் விளைவிக்கிறோம்.

எண்ணெயை தயாரிச்சு, சித்த மருத்துவர்களோட கருத்துகளை கேட்டேன். அவங்களோட ஆலோசனைப்படி, மூலிகைகளை அதிகரிக்குறது, குறைக்குறதுன்னு சில மாற்றங்கள் செய்தேன்.

முதலில் குறைந்த அளவில் எண்ணெய் தயாரித்து சிலருக்கு சாம்பிள் கொடுத்தேன். அப்புறம், அரசு லேப்புக்கு எங்களுடைய ஆயில் மாதிரிகளை அனுப்பி, கிளினிக்கல் டெஸ்ட் சான்றுகளை வாங்கினோம்.

இதை எல்லாம் முடித்த பின், பிராண்ட் பெயர், லோகோ எல்லாம் டிசைன் செய்தோம். இன்ஸ்டாகிராமில் விளம்பரங்கள் செய்து, சினேகம் ஹெர்பல் பிராண்டை விற்பனைக்கு எடுத்துட்டு வந்திருக்கோம். 200 மில்லி எண்ணெயை, 999 ரூபாய்க்கு விற்கிறோம். மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு.

துபாய், மலேஷியா, அமெரிக்கா உட்பட வெளிநாடுகளில் இருந்தும் தொடர்ந்து ஆர்டர் வருகிறது. எண்ணெயை தொடர்ந்து, வேற சில ஹெர்பல் தயாரிப்புகளையும் செய்யும் ஐடியா இருக்கு. மக்களோட ஆதரவும், எங்களோட கடின உழைப்பும் பிசினஸை நிச்சயம் ஜெயிக்க வைக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us