/தினம் தினம்/சொல்கிறார்கள்/ பெண்களின் உழைப்புக்கு நன்றி சொல்வதில் பெரு மகிழ்ச்சி! பெண்களின் உழைப்புக்கு நன்றி சொல்வதில் பெரு மகிழ்ச்சி!
பெண்களின் உழைப்புக்கு நன்றி சொல்வதில் பெரு மகிழ்ச்சி!
பெண்களின் உழைப்புக்கு நன்றி சொல்வதில் பெரு மகிழ்ச்சி!
பெண்களின் உழைப்புக்கு நன்றி சொல்வதில் பெரு மகிழ்ச்சி!
PUBLISHED ON : ஜூலை 27, 2024 12:00 AM

கடந்த 75 ஆண்டுகளுக்கு முன், சில நுாறு ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்டு, இன்று ஆண்டுக்கு, 1,800 கோடி ரூபாய்க்கு, 'டர்ன் ஓவர்' செய்யும் நிறுவனமாக உயர்ந்திருக்கும், 'சைக்கிள் பிராண்ட்' அகர்பத்தி நிறுவனத்தின் இயக்குனர் அர்ஜுன் ரங்கா: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு கிராமத்தில் பிறந்தவர் தாத்தா
ரங்காராவ்.
மொத்த மார்க்கெட்டில் பொருட்களை வாங்கி, சிறிய கடைகளில் விற்பனை செய்வது என, தனக்கு தெரிந்த வழிகளில் பணம் சம்பாதித்தார்.
பொறுப்புகள் அதிகமாகவே நிறைய சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலையில் கர்நாடகாவிற்கு சென்றார். சொந்தமாக தொழில் துவங்க வேண்டிய நேரத்தில், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. அந்நேரத்தில், அவருக்கு அரசு வேலை கிடைத்தது.
அப்போது, அரசு வேலையா, சொந்த தொழிலா என்று குழம்பி நின்ற நேரத்தில், 'நீங்கள் நினைத்தபடி சொந்தமாக ஒரு தொழில் துவங்குங்கள்' என்று தைரியம் அளித்து, தன் நகைகளை விற்று முதலீட்டை கொடுத்தார் என் பாட்டி.
உறுதியான அந்த முடிவு தான், 75 ஆண்டுகளை கடந்து நிற்கும், என்.ரங்காராவ் அண்டு சன்ஸ் பிரைவேட் லிமிடெட்.
எங்கள் குடும்பத்தினர் அதீத தெய்வ பக்தி கொண்டவர்கள். அதனால், இறை வழிபாடு தொடர்பான வியாபாரம் குறித்து யோசித்த போது தோன்றியது தான், அகர்பத்தி
தயாரிப்பு.
குடும்பத்தினர் அனைவரும், வீட்டிலேயே அகர்பத்திகள் தயாரிக்க துவங்கினர். எல்லாரும் நன்கறிந்த சைக்கிள் என்பதை பிராண்டின் முத்திரையாகவும், பெயராகவும் வைத்தனர்.
உற்பத்தியை அதிகரிக்க அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களுக்கு வேலை கொடுத்தோம். அது இன்று பல்கி பெருகி, இன்றைய நிலையில் இந்திய அளவில், 31,000க்கும் மேற்பட்ட பெண்களை ஒருங்கிணைத்து வேலை கொடுத்து
வருகிறோம். காசி விஸ்வநாதர் கோவிலில் மூலவருக்கு சமர்ப்பிக்கப்படும் பூக்களையும், மைசூரு சாமுண்டீஸ்வரிக்கு பக்தர்கள் அணிவிக்கும் பூக்களையும் சேகரித்து, அதில் கிடைக்கும் திரவியத்தில் இருந்து புஷ்கரணி என்ற பெயரில் அகர்பத்திகளை செய்கிறோம். என் அம்மா இன்றும் வாசனை திரவியங்களை கலக்கும் பணியை செய்து
வருகிறார்.
உலக அளவில், 'பெர்ப்யூம்' தயாரிப்பில் பிரான்ஸ் நம்பர் ஒன்னாக இருக்கலாம். ஆனால், நம் மக்கள் மனதில் நம்பர் ஒன்னாக இடம் பிடித்துள்ளது, மதுரை மல்லியில் இருந்து தயாரிக்கப்படும் ஜாஸ்மின் பெர்ப்யூம் தான். அதை நாங்கள் தான் தயாரிக்கிறோம்.
அதேபோல் அகர்பத்திகளை பொறுத்தவரை, இந்திய தயாரிப்புகள் தான் நம்பர் ஒன்னாக இருக்கின்றன. அதன் பின்னணியில் உள்ள பெண்களின் உழைப்புக்கு நன்றி சொல்வதில் பெருமகிழ்ச்சி
அடைகிறோம்.