ADDED : செப் 11, 2025 11:13 PM
நாய் தொல்லை வில்லியனுார், பத்மினி நகரில், தெரு நாய்கள் அதிகளவு உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சமடைகின்றனர்.
சரண்யா, வில்லியனுார். குப்பைகள் தேக்கம் கொசப்பாளையம், ஏழை மாரியம்மன் கோவில் தெருவில், குப்பை வண்டி வராததால், குப்பைகள் தேங்கி கிடக்கிறது.
சாந்தி, கொசப்பாளையம். நடைபாதை ஆக்கிரமிப்பு நேரு வீதி சாலையோர நடைபாதையில், கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், மக்கள் நடந்து செல்ல சிரமப்பட்டு வருகின்றனர்.
கவிச்செல்வன், நேரு வீதி. குண்டும் குழியுமான சாலை முதலியார்பேட்டை, போஸ்ட் ஆபீஸ் அருகே சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ரமணி, முதலியார்பேட்டை.