ADDED : ஜூன் 05, 2025 07:33 AM
போக்குவரத்து இடையூறு
சாரம் பாலாஜி நகர், 3வது குறுக்கு தெருவில், மணல் கொட்டி வைத்துள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
பரிமளா, சாரம்.
பைப் உடைந்து தண்ணீர் விரயம்
தேங்காய்த்திட்டு, மேட்டுத் தெருவில் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வழிந்தோடி விரயமாகிறது.
சரஸ்வதி, தேங்காய்த்திட்டு.
வாய்க்காலில் அடைப்பு
சந்தைபுதுக்குப்பம், துர்கா கோவிலுக்கு செல்லும் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
ஜெயராஜ், சந்தைபுதுக்குப்பம்.
போக்குவரத்து நெரிசல்
வில்லியனுாரில், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிமாகி வருவதால், கூடுதாக போக்குவரத்து போலீசாரை அமைத்து கண்காணிக்க வேண்டும்.
ரஜினிமுருகன், வில்லியனுார்.