ADDED : ஜூன் 01, 2025 11:46 PM
போக்குவரத்து நெரிசல்
கொக்குபார்க் சந்திப்பில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், கூடுதலாக போக்குவரத்து போலீசாரை நியமித்து, சீர் செய்ய வேண்டும்.
கதிரவன், கொக்குபார்க்.
சுகாதார சீர்கேடு
உருளையன்பேட்டை, அண்ணா திடலில், குப்பைகளை சாலையில் கொட்டி செல்வதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
பாஸ்கர், உருளையன்பேட்டை.
குப்பை வண்டி வருமா?
ராஜ்பவன், சுய்ப்ரேய்ன் வீதியில் குப்பை வண்டி சரிவர வராமல் இருப்பதால், குப்பைகள் தேங்கி கிடக்கிறது.
ராஜேந்திரன், ராஜ்பவன்.
பயணியர் நிழற்குடை தேவை
தவளக்குப்பத்தில், பயணியர் நிழற்குடை இல்லாமல் இருப்பதால், பொதுமக்கள் வெயிலில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.
காளிதாஸ், தவளக்குப்பம்.