ADDED : மார் 26, 2025 04:14 AM
தெரு நாய்கள் தொல்லை
லாஸ்பேட்டை அசோக் நகர், கவிக்குயில் வீதியில், தெரு நாய்கள் சுற்றித் திரிவதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
ராமன், லாஸ்பேட்டை.
மாடுகளால் விபத்து அபாயம்
முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகரில் மெயின் ரோட்டில், மாடுகள் படுத்து கிடப்பதால், வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.
ராதிகா, முருங்கப்பாக்கம்.
காய்கறி மார்க்கெட் ஆக்கிரமிப்பு
அரியாங்குப்பம் காய்கறி மார்க்கெட்டில், ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால்,கூட்ட நெரிசலில் மக்கள் அவதியடைகின்றனர்.
கதிரேசன், அரியாங்குப்பம்.
வாகன நெரிசல்
அண்ணா சாலையில் வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து இடையூறு ஏற்படுவதை போலீசார் கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்.
மாதவன், அண்ணாசாலை.