Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : மே 23, 2026 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : மே 23, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி: இருமொழி கொள்கை என்பது பள்ளி கல்வியில் மட்டும் கிடையாது. தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை கொள்கைகளில் அதுவும் ஒன்று. அவரவருக்கு, அவர்களது தாய் மொழி முக்கியம். உறவுகளுடன் பேச தாய் மொழி, உலகத்துடன் பேச ஆங்கிலம் என்ற கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

நம்ம பசங்க நல்லா படிச்சு வட மாநிலங்கள்ல வேலைக்கு போனா, அங்க ஆங்கிலமும், தமிழும் தெரியாதவங்களிடம் எப்படி தொடர்பு கொள்வாங்க என்ற கேள்விக்கு இவர் விடை தருவாரா?

ம.தி.மு.க., - எம்.பி., துரை பேட்டி: 'கூட்டணி இல்லாமல் தி.மு.க., ஜெயிக்கலாம்' என்பது, அக்கட்சி எம்.பி., கனிமொழியின் கருத்து. கூட்டணி பலம் இல்லாமல் தி.மு.க., வெற்றி பெறும் சூழலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அக்கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்ற கருத்தில், அவர் சொல்லி இருக்கிறார். ம.தி.மு.க.,வை வலுப்படுத்த வேண்டும், என்றுதான் நானும் சொல்வேன். கனிமொழி சொன்ன அதே கருத்தை நாங்களும் சொல்லலாம்; பிற இயக்கங்களும் சொல்லலாம்.

தி.மு.க., பெரிய கட்சி என்பதால், தனித்து போட்டியிடும் கட்டமைப்பு அவங்களிடம் இருக்குது... ஆனா, ம.தி.மு.க., அந்த முடிவை எடுத்தால், அரசியல்ல இருந்தே காணாம போயிடும்!

தி.மு.க., முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு:

கிறிஸ்துவ ஓட்டுகள் வேண்டும் என்றால், ஜோசப் விஜய் என்றும் ஹிந்து ஓட்டுகள் வேண்டும் என்றால், விஜய் என்றும் கூறி ஓட்டுகளை பெற்றுள்ளார் விஜய். குழந்தைகளை துாண்டிவிட்டு, பெரியவர்களின் ஓட்டுகளை பெற்றுள்ளார். இப்படி அமைந்த ஆட்சி, மூன்று, நான்கு மாதங்கள் தான் நீடிக்கும்.

இவர் சொல்வது போல, விஜய் ஆட்சி கவிழ்ந்து மறுபடியும் தேர்தல் வந்துட்டா, தி.மு.க.,வுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தாவது மிஞ்சுமா என்பது சந்தேகம் தான்!

த.மா.கா., பொதுச்செயலர் யுவராஜா அறிக்கை: தமிழக அரசியல் வரலாற்றில், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்ற மக்கள் இயக்கமாக, தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளது. தமிழக அரசியலில் தனித்துவமான இடத்தை பெற்றுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நீதி, பெண்கள் முன்னேற்றம் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் ஆகியவற்றை மையமாக கொண்டு செயல் படும் இந்த கட்சி மீது மாணவர்களும், இளைஞர்களும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.

இவரது கட்சி தலைவர் வாசன் மீது இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் நம்பிக்கை போயிடுச்சுன்னு சொல்ல வர்றாரா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap