Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : மே 22, 2026 12:17 AM

Follow on Google

PUBLISHED ON : மே 22, 2026 12:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை தொகுதி காங்., - எம்.பி., கார்த்தி அறிக்கை:

ஆந்திராவில், 3வது மற்றும் 4வது குழந்தைகளை பெற்றுக் கொண்டால் உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆபத்தானது. நமக்கு ஆரோக்கியமான மற்றும் திறமையான மக்கள் தொகையே தேவை. ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்கள் தொகை அல்ல. அந்த பணத்தை ஊட்டச்சத்து, பள்ளிகள் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.

மக்கள் தொகையை குறைச்சுட்டதால, எம்.பி.,க்கள் எண்ணிக்கை குறைஞ்சிடும்னு பயந்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பாரோ?

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி:

ஒரு கட்சி யின் தலைவரை, முதல்வர் சந் திப்பது மரபு தான்; ஆனால், அந்த மரபை முதல்வர் விஜய் உடைத் து உள்ளார். அவர், அ.தி.மு.க ., பொதுச் செயலரான பழனிசாமியை தான் சந்தித்திருக்க வேண்டும். ஆனால், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களிடம் பதவி ஆசையை துாண்டிவிட்டு, அவர்களை முதல்வர் விஜய் சந்தித்து உள்ளார். இதுதான் துாய ஆட்சியா?

பழனிசாமி முதல்வர் பதவியில் அமர்வதற்காக, பரம எதிரியான தி.மு.க.,வின் ஆதரவையே பெற துணிஞ்ச கதைக்கு முன்னாடி, விஜயின் செயல் தப்பா படலையே!

தி.மு.க., செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி:

கரூரில், 41 பேர் பலியான துயரம், த.வெ.க., தலைவர் விஜய் செய்த தவறால்தான் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு வருகிறேன் எனக் கூறிவிட்டு, இரவு 7:30 மணிக்கு வந்தே அவர் உரையாற்றினார். விஜய் சரியான நேரத்திற்கு வந்து சென்றிருந்தால், மக்கள் வீடுகளுக்கு திரும்பியிருப்பர். கரூர் துயர சம்பவத்தின்போது பணியாற்றிய அதிகாரிகளை அங்கேயே வைத்திருந்தால், விசாரணையின்போது அவர்கள் உண்மையை சொல்லி விடுவர் என்ற அச்சத்தால், அவர்களை விஜய் மாற்றியுள்ளார்.

எந்த புதிய அரசு வந்தாலும், நிர்வாக காரணத்துக்காக அதிகாரிகளை மாத்துறது வழக்கம் தானே... பலமுறை ஆளுங்கட்சியா இருந்த தி.மு.க.,வும் இதை செஞ்சிருக்கே!

தமிழக காங்., கலை துறையின் முன்னாள் மாநில நிர்வாகி மயிலை அசோக்குமார் பேச்சு:



த.வெ.க., ஆட்சிக்கு காங்கிரஸ் மட்டுமல்ல; வி.சி.க., மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு அளித்து உள்ளன. ஆனால், காங்கிரஸ் கட்சியை மட்டும் குறை கூறி பேசுவது தி.மு.க.,வின் வழக்கமாக உள்ளது. திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியனை ஏன் தி.மு.க., முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சீண்டவில்லை. காரணம், அவர்கள் தி.மு.க.,வின் அடிமைகள். காங்கிரஸ் யாருடைய அடிமையும் அல்ல.

தி.மு.க.,வுக்கு பல வருஷங்களா அடிமையா இருந்ததால் தானே, சட்டசபை தேர்தலில் த.வெ.க., கூட்டணியில் உங்களால சேர முடியலை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap