Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : மே 03, 2026 01:26 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 03, 2026 01:26 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அறிக்கை: நடிகர் அஜித், தன் ரசிகர்கள் எல்லைமீறும் போது கண்டிப்பார். அதே ரசிகர்கள் அன்பு காட்டும் போது, அவர்களை அரவணைப்பார். சிறந்த நடிகனாகவும், நல்ல மனிதனாகவும் தன்னை எப்போதும் வைத்து கொள்ளும் அஜித், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்று, பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்கிறார். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

* அஜித் புகழ் பாடும் சாக்கில், தேர்தலில் தங்களுக்கு குடைச்சல் கொடுத்த நடிகரை மறைமுகமாக விமர்சிக்கிற மாதிரி தெரியுதே!

***



மா.கம்யூ., கட்சி மாநில செயலர் சண்முகம் பேட்டி: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவும், கட்சியினர் மத்தியில் சலசலப்பை உண்டாக்கவும் வெளியிடப்படும் கருத்து திணிப்பே. விஜய் ஆட்சி அமைப்பார் எனவும் கருத்து கணிப்பு வந்துள்ளது. இதை யாராவது ஏற்றுக்கொள்வரா? விஜய் கூட இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்.

* அப்படி என்றால், 'தி.மு.க.,வே மீண்டும் ஆட்சிக்கு வரும்' என்று வெளியான கருத்து கணிப்புகளையும் இவர் ஏத்துக்க மாட்டாரா?

-



திராவிட வெற்றி கழகத்தின் தலைவர் மல்லை சத்யா அறிக்கை: அடுத்த ஆண்டு சித்திரை முழுநிலவு நாளுக்குள், கண்ணகிக்கு சென்னையில் மணி மண்டபம் கட்ட வேண்டும். கேரள அரசின் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மங்களதேவி கண்ணகி கோவிலுக்கு செல்ல, கேரள வனத்துறையினர் கடும் நெருக்கடிகளை கொடுக்கின்றனர். அதற்கு மாற்றாக, தமிழக வனப்பகுதி வழியாக செல்ல, லோயர் கேம்ப் வனச்சாலையை சீரமைக்க வேண்டும். சித்திரை முழுநிலவு நாளில், மங்களதேவி கண்ணகி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தமிழக அரசின் சார்பில் அன்னதானம் வழங்க வேண்டும்.

* எல்லாரும், நாளைக்கு வரப்போற தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி, 'திக்திக்'னு காத்திருக்காங்க... இந்த நேரத்தில், இவரது கோரிக்கையை யார் கண்டுக்க போறாங்க?

அ.தி.மு.க., அமைப்பு செயலரும், சென்னை துறைமுகம் தொகுதி வேட்பாளருமான ராயபுரம் மனோ பேட்டி: என் சொத்தை பறிக்க முயற்சி செய்யும் சிலர், எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். தி.மு.க., ஆட்சியில் காவல் துறை மீதுள்ள நம்பிக்கை சுத்தமாக போய்விட்டது. 'காவல் துறையின் ஈரல் கெட்டு விட்டது' என, முன்னாள் முதல்வர் கருணாநிதியே ஒரு முறை கூறினார். முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில், காவல் துறை ஒரு நடைபிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.

* இவரது கட்சி ஆட்சிக்கு வந்துட்டால், காவல் துறை சூப்பர் மேனாக மாறிடுமோ?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us