Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : ஏப் 30, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 30, 2026 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை:

மனசாட்சிய தொட்டு சொல்லுங்க. முதல்வர் ஸ்டாலின் அளவுக்கு மற்ற கட்சியினர் ஓடி ஓடி உழைச்சீங்களா. அவர் அளவுக்கு உரிமைகளை காக்க போராடுனீங்களா. கட்சியை கட்டுக்கோப்பா வைத்துக் கொண்டீர் களா, கூட்டணியை பலமாக கட்டுனீங்களா, திசையெட்டும் திரும்பி பார்க்கும் திட்டங்களை கொடுத்தீங்களா. அவர் அளவுக்கு களத்துல கண்ணியமா பிரசாரம் செய்தீங்களா. அவர் அளவுக்கு, யாராவது தேர்தல் முடிவுகளில் நம்பிக்கையா இருக்காங்களா. எனவே, திருவாரூரின் தேர் அழகாய், அவரே தொடர்வார்.

தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமா வரும்னு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும், த.வெ.க., தலைவர் விஜயும் நினைக்கிறாங்க... 'நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்...' என்ற சந்திரபாபுவின் பாடல் தான் நினைவுக்கு வருது!

பா.ம.க., நிறுவனர் ராமதாசின் மகளும், அக்கட்சியின் செயல் தலைவருமான ஸ்ரீகாந்தி பேட்டி:

ஓட்டு எண்ணிக்கை முடிவில், யார் ஆட்சி அமைப்பர் என்பதை மக்கள்தான் முடிவு செய்வர். இந்த தேர்தலில், புதிய அணி ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்பு குறைவாக உள்ளது. பழைய அணிதான், அதாவது தி.மு.க.,வே மீண்டும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

சசிகலா கட்சியுடன் கூட்டணி போட்டு, இவங்க கட்சி நிறுத்திய வேட்பாளர்கள், 'டிபாசிட்' தொகையாவது வாங்குவாங்களா?

கோவை வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசன் பேட்டி:

ஓட்டுப்பதிவுக்கு முதல் நாள், என் தொகுதியில், 'க்யூ. ஆர்.கோடு' அட்டைகளில் தி.மு.க., சின்னம் பதித்து, வீடு வீடாக வினியோகித்துள்ளனர். அந்த அட்டையை, ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின், அருகே உள்ள தி.மு.க., அலுவலகத்தில் கொடுத்தால், தங்கம் மற்றும் வெள்ளி நாணயம் வழங்குவதாக கூறியுள்ளனர். இந்த ஏமாற்று வேலைகளை மக்கள் நன்றாக புரிந்து கொண்டனர்.

ஜெயித்தாலும், தோற்றாலும் தி.மு.க., வேட்பாளரையோ, அந்த கட்சி நிர்வாகிகளையோ அஞ்சு வருஷத்துக்கு பார்க்கவே முடியாது!

தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இரு க்கிறது. தமிழகம் முழுதும் எழுச்சி அலை வீசியது. எனது திருச்சுழி தொகுதியிலும் அந்த அலை எதிரொலித்தது. முன்னாள் முதல்வர் கருணாநிதி சொன் னது போல, திருச்சுழி வெற்றிச் சுழியாக அமையும். வரும், 4ல் நடக்கும் ஓட்டு எண்ணிக்கையில், ஸ்டாலின் மீண்டும் முதல்வராகி, 'திராவிட மாடல் 2.0' ஆட்சி தொடரும்.

நிறைய வாக்காளர்கள், 'திராவி ட மாடல் 1' ஆட்சியே போதும்கிற முடிவுல இருந்ததா பேசிக்கிறாங்களே... அதையும் மீறி, இவரது கனவு பலிக்குமா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us