Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

1


PUBLISHED ON : ஏப் 18, 2026 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : ஏப் 18, 2026 12:00 AM

1


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் பேச்சு:

தமிழகத்திற்கு எதிரான பா.ஜ.,வை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தமிழக மக்கள் அனுமதிக்க கூடாது. வேறு மாநில அமைச்சர்கள் வந்து பிரசாரம் செய்யும் அளவுக்கு, அ.தி.மு.க.,வின் நிலை உள்ளது. பா.ஜ.,வின் கொள்கையை தமிழகம் ஏற்றுக் கொள்ளாது. முதல்வருடன் சேர்ந்து, ராகுல் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். தி.மு.க., அரசு செய்த திட்டங்களால், 23 கட்சிகளை கொண்ட எங்கள் கூட்டணியின் வெற்றி உறுதி!

தி.மு.க., திட்டங்களாலேயே ஜெயிக்க முடியும் என்றால், ராகுல் எதுக்கு வேகாத வெயில்ல இரண்டு நாள் அலையணும்?

அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர் டாக்டர் சரவணன் பேச்சு:

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 292 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துள்ளார். இதன்படி, தி.மு.க., ஆட்சியில் சொத்துவரி, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தலா, 10,000 ரூபாய் வழங்க உள்ளார். அதேபோல, அனைத்து குடும்பங்களுக்கும் குளிர்சாதன பெட்டி வழங்க உள்ளார். மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடும் என்னை, 50,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.

'தி.மு.க., தரும் 8,000 ரூபாய் பரிசு கூப்பனை விட, குளிர்சாதன பெட்டி, 10,000 ரூபாய் தான் பெருசுங்கிறதை மறந்துடாதீங்க'ன்னு நாசுக்கா சுட்டிக்காட்டுறாரோ?

தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி:

எங்கள் கட்சியின் தெலுங்கானா எம்.எல்.ஏ., உத்தம் ரெட்டி, தமிழக பிரசாரத்துக்கு வருவதற்கு திட்டமிட்டிருந்தார். அவரது ஹெலிகாப்டருக்கு முதல் நாள் வழங்கிய அனுமதியை, மறுநாள் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. பா.ஜ., தலைவர்கள் எல்லா மாவட்டங்களுக்கும் ஹெலிகாப்டரில் செல்கின்றனர். ஆனால், எங்கள் பிரசாரத்திற்கு மட்டும் தேர்தல் ஆணையம் நெருக்கடி அளிக்கிறது.

ஹெலிகாப்டர் பயண செலவு மிச்சம்னு உத்தம் ரெட்டி சந்தோஷப்பட்டிருப்பாரு!

தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரசாத் அறிக்கை: நடிகர் விஜய், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என, தனது ரசிகர்களை குறி வைத்து, எண்ணற்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அனைத்து மாநில லாட்டரி சீட்டுகளை விற்பவர்கள் போல, அனைத்து கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட விஷயங்களில், இரண்டு முதல் மூன்று மடங்கு வரை ஒவ்வொரு விஷயத்தையும் அதிகப்படியாக அறிவித்து விட்டால், தமிழக மக்கள் தனக்கு ஓட்டளித்து விடுவர் என்று பகல் கனவு காண்கிறார்.

விஜய் படங்களுக்கான கதைகளை தான் தெலுங்கில் இருந்து, 'காப்பி' அடிச்சாங்கன்னு பார்த்தா, தேர்தல் அறிக்கையையும் அப்படியே பண்ணிட்டாங்களே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap