Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : ஏப் 03, 2026 03:20 AM

Follow on Google

PUBLISHED ON : ஏப் 03, 2026 03:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திராவிட வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் மல்லை சத்யா அறிக்கை: இந்தியாவில், நடைமுறையில் உள்ள மூன்றடுக்கு தேர்தல் முறையில் லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சி மன்றங்களில், அரசியல் கட்சிகளின் சின்னங்கள் குறித்து, வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. இதனால், மாநில மற்றும் தேசிய அளவில் இரண்டு அணிகள் கூட்டணி அமைத்து போட்டியிடும் போது, பல கட்சி சின்னங்களுக்கு பதிலாக, இரண்டு பொது சின்னங்களில் போட்டியிட சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். நல்ல ஐடியா தான்... ஆனா, ம.தி.மு.க.,வில் இருந்து வெளியேற்றப்பட்ட இவர், தனி கட்சி துவங்கியும், தி.மு.க., அணிக்கு ஆதரவுன்னு சொல்லிட்டு, தேர்தல்லயே போட்டியிடாம ஒதுங்கிட்டாரே... சின்னத்தை பத்தி இவருக்கு என்ன கவலை?

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு: அ.தி.மு.க.,வில், என் தந்தையார் காலத்தில் இருந்து இருக்கிறேன். என் உடலில் ஓடுவது, அ.தி.மு.க., ரத்தம்; துரோக ரத்தம் கிடையாது. நான் இறந்தால் கூட என் மேல், அ.தி.மு.க., கொடி தான் போர்த்தப்பட்டிருக்கும். என் உயிர் உள்ள வரை, அ.தி.மு.க., தான்; என் வாழ்க்கை குமாரபாளையம் தொகுதி மக்களுக்கு தான். அவர்களுக்கு என்றும் சேவகனாகவே இருப்பேன்.

இவரது கட்சி தலைவர் பழனிசாமியுடன் மனக்கசப்பில் இவர் இருப்பதாக தகவல்கள் வெளியானதை மறுக்கிற விதமா, இப்படி உருக்கமா பேசியிருக்காரோ? தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யும், மூத்த வழக்கறிஞருமான வில்சன் பேச்சு: மத்திய அரசின், 'சிவில் சர்வீஸ்' முதல்நிலை தேர்வு, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படுகிறது. இதனால், தென் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த திறமையான தேர்வர்கள் முதல் சுற்றிலேயே வெளியேற்றப்படுகின்றனர். எனவே, தமிழ் உட்பட அனைத்து, 22 மொழிகளிலும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நடத்த வேண்டும்.

ஹிந்தி தெரியலன்னாகூட பரவாயில்லை...பல மாநி லங்கள்லயும் பணிபுரிய வேண்டி யிருக்கும், சிவில் சர்வீஸ் வேலை களில் சேர்வோருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டாமா? த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: கடந்த, 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் காலத்தில், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, மதுக்கடைகளை மூடுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, மதுக்கடைகளை அதிகப்படுத்தி, மனமகிழ் மன்றங்கள் திறந்து வைத்து, மதுவை தாராளமயமாக்கி குற்றங்கள் அதிகரிக்க செய்தது தான், தி.மு.க., ஆட்சியின் வேதனையான சாதனை.

இவர் அங்கம் வகிக்கும், அ.தி.மு.க., கூட்டணியில் கூட, 'மதுக்கடைகளை படிப்படியாக மூடுவோம்'னு பொத்தாம் பொதுவான வாக்குறுதியை தானே தந்திருக்காங்க!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap