sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : மார் 02, 2026 02:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 02, 2026 02:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா.ஜ., மகளிர் அணி தேசிய தலைவர் வானதி பேட்டி: தமிழக அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்ய, நீதிமன்றம் உத்தரவிட்டு எத்தனை நாட்களாகிறது... அதெல்லாம் ஊழலாக, முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியவில்லையா... ஆனால், திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில், கோர்ட் உத்தரவிட்டும், மாநில அரசு அதை நிறைவேற்றாமல் உள்ளது. ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டும் என்பதே, தி.மு.க.,வினரின் நோக்கம். மொத்தத்தில், எந்த கோர்ட் உத்தரவுகளையும் நடைமுறைப் படுத்த மாட்டோம் என்பதில், தி.மு.க., அரசு தெளிவா இருக்கு போலும்!



அணைக்கட்டு தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., நந்தகுமார் பேச்சு: 'ஏழுமலையான் மீதும், முதல்வர் மீதும் ஆணையாக, மேல்அரசம்பட்டில் அணை கட்டுவேன்' என்றேன். அதுபோல, தற்போது அடிக்கல் நாட்டியுள்ளேன். இதற்காக, அணைக்கு எதிராக வழக்கு போட்டிருந்தவர் காலில் விழுந்து, அவரை வழக்கை வாபஸ் வாங்க வைத்து, அணை கட்ட அடிக்கல் நாட்டியுள்ளேன்.

அஞ்சு வருஷம் சும்மா இருந்துட்டு, ஆட்சி முடியும் நேரத்தில் அடிக்கல் மட்டும் நாட்டிட்டு, அணையையே கட்டி முடிச்சிட்ட மாதிரி அள்ளி விடுறாரே!



தென் மாவட்ட விவ சாயிகள் சங்க பொதுச் செயலர் அர்ச்சுனன் பேட்டி: 'வைகை அணையை துார் வார நிதி ஒதுக்கப்படும்' என, சட்டசபையில் தமிழக அரசு தெரிவித்தாலும், 'தற்போது நிதியில்லை' என்று கூறி, திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. செலவில்லாத பட்ஜெட் ஒன்று, மதுரை நீர்வளத்துறை அலுவலகத்தில் இருந்து, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் மூலம், அணையில் உள்ள வண்டல் மண்ணை எடுத்து விற்பனை செய்தால், 80 கோடி ரூபாய் வரை அரசுக்கு வருமானம் கிடைக்கும். அதுவும் கிடப்பில் உள்ளது.

வரவுக்கும், செலவுக்கும் சரியா இருக்குற மாதிரி திட்டம் தயாரிச்சா எப்படி அனுமதி கிடைக்கும்... 'டெண்டர்' விட்டு, 'கமிஷன்' அடிக்க வாய்ப்பிருந்தால், உடனே அனுமதி தந்திருப்பாங்க!

தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி பேச்சு: இந்தியாவிலேயே குறைந்த நாட்கள் லோக்சபாவிற்கு சென்ற ஒரே, எம்.பி., நம்ம, பா.ம.க., தலைவர் அன்புமணி தான். அவரை பற்றி பேசினால், அவங்க கட்சிக்காரர் களுக்கு கோபம் வருகிறது... ஆனால், அந்த கோபத்திற்கு அஞ்சுகிற ஆள் நானல்ல. என்னை, 'நாவடக்கத்துடன் பேச வேண்டும்' என்று பா.ம.க., முன்னாள், எம்.எல்.ஏ., வேலுசாமி சொல்கிறார். என்னை பார்த்தால், உங்களுக்கு ஒரு வன்னியராக தெரிய வில்லையா... அன்புமணி மட்டும் தான் வன்னியரா?

வரவிருக்கும் சட்டசபை தேர்தலில், உங்க மாவட்டத்தில் அன்புமணி போட்டியிட்டால், ரணகளம் உறுதி என்பது தெளிவா தெரியுது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us