Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

PUBLISHED ON : செப் 18, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
சிவகங்கை தொகுதி காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் பேட்டி: எந்த ஒரு கட்சி ஆட்சியில் இருந்தாலும் நிறை, குறைகள் இருக்கத்தான் செய்யும். அவற்றை ஆராய்ந்த போது, தி.மு.க., ஆட்சியில் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கூட்டணி ஆட்சி குறித்து பலரும் கேட்கின்றனர். 1967 முதல் அந்த ஏக்கம் காங்கிரசுக்கு உள்ளது. 2006ல் அந்த வாய்ப்பு வந்தபோது பயன்படுத்தி கொள்ளவில்லை. மீண்டும் வாய்ப்பு வந்தால் காங்., பயன்படுத்திக் கொள்ளும். கடந்த, 2006ல் தி.மு.க., 96 இடங்களில் மட்டுமே ஜெயித்து, காங்., தயவில் ஆட்சி நடத்தியது... அந்த நிலை திரும்ப வரும் அளவுக்கு தற்போதைய முதல்வர் ஸ்டாலின் நடந்துக்க மாட்டாரு!

தமிழக காங்., சிறுபான்மையினர் அணி தலைவர் முகமது ஆரீப் அறிக்கை: வக்ப் தி ருத்த சட்டத்திற்கு எதி ராக தொடர்ந்த வழக்கில், முக்கிய திருத்தங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த சட்டத்திருத்த மசோதா பார்லிமென்டில் அறிமுகப் ப டுத்தப்பட் டதில் இருந்தே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த இடைக்கால தடையை வரவேற்கும் அதே நேரத்தில், சட்டத்தை முழுமையாக திரும்ப பெறும் வரை ஜனநாயக வழியில் எங்கள் போராட்டம் தொட ரும்.

உச்ச நீதிமன்ற உத்தரவை நீங்களும் பாராட்டுறீங்க; பா.ஜ.,வினரும் வரவேற்கிறாங்க... 'யாருக்கு வெற்றி'ன்னு தெரியாம மக்கள் தான் மண்டை காய்ஞ்சு போயிருக்காங்க!

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: தமிழக அரசு, இளையராஜா வுக்கு நடத்திய பாராட்டு விழாவில், ரஜினி பீர் குடித்த கதையை பகிர்ந்தது தேவையற்ற ஒன்றாகும். அது மட்டு மல்லாமல், கதாநாயகிகள் குறித்து கிசுகிசு பேசினார் என்பது, இளையராஜா மீதான நல்ல பிம்பத் தை சுக்குநுாறாக உடைத்து விட்டது. உங்க ள் போதைக்கு, எப்போதுமே பெண்கள்தான் ஊறுகாயா. பெண்களை போதை பொருளாக பார்க்கும் சமூகத்தில் வாழ்வது வேதனை யே.

'எவ்வளவு பெரிய மனிதர் களாக இருந்தாலும், மது உள்ளே போயிட்டா, அவங்க ரசனையும் மட்டமாகிடும்' என்று, இதை ஒரு பாடமாகவும் எடுத்துக்கலாமே!

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேட்டி: என் நி லைப் பாடு குறித்து பல இடங்களில் கூறி விட்டேன். இந்த தேர்தலில், அ.ம.மு.க., வெற்றி முத் திரை பதிக்கும். நாங்கள் மற்றவர்கள் போன்று, அகங்காரம், ஆணவத்தில் கூறவில்லை. அ.ம.மு.க., அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சி அமைக்கும். 75 மற்றும் 50 வருட கட்சிகளுக்கு இணையாக, அ.ம.மு.க., வளர்ந்து விட்டது.

அப்படியென்றால், அ.ம.மு.க., தலைமையிலேயே ஒரு கூட்டணியை உருவாக்கிடலாமே!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us