Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

PUBLISHED ON : மார் 21, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ எம்.பி., பேச்சு:மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைகள், வன்கொடுமைகள் தொடர்கின்றன. எங்களுக்கு உள்ள மில்லியன் டாலர் கேள்வியே, பிரதமர் மோடிக்கு மணிப்பூர் செல்வதை தவிர வேறு என்ன வேலை என்பது தான். அவர் பிரைம் மினிஸ்டர் அல்ல; பிக்னிக் மினிஸ்டர். ஒவ்வொரு நாடாக செல்கிற மோடியால், ஏன் மணிப்பூர் மாநிலத்திற்கு செல்ல முடியவில்லை? மணிப்பூர் இந்தியாவின் ஒரு அங்கம் இல்லையா?

முடியப் போற தன் ராஜ்யசபா எம்.பி., பதவியை, தி.மு.க., தயவுல நீட்டிக்க இவர் முயற்சிப்பது நல்லாவே தெரியுது!

அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர் டாக்டர் சரவணன் அறிக்கை: தமிழக மக்கள் நல்வாழ்வு துறைக்கு, 20,906 கோடி ரூபாய், இந்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இன்றைக்கு 48 சதவீதம் பேர் தனியார் மருத்துவமனைகளை நாடியே செல்கின்றனர். ஏனென்றால், அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள், மாத்திரைகள், ஏன் மருத்துவர்கள் பயன்படுத்தும் முக கவசங்கள், கையுறைகள் கூட இருப்பதில்லை.

மது விற்பனையில், 50,000 கோடி ரூபாயை அசால்டா அள்ளுறாங்க... ஆனா, 8 கோடி மக்களின் நல்வாழ்வுக்கு, 20 ஆயிரத்து சொச்சம் கோடி மட்டும் ஒதுக்குனா, அரசு மருத்துவமனைகளின் நிலை அப்படித்தானே இருக்கும்!

கன்னியாகுமரி காங்., - எம்.பி., விஜய் வசந்த் பேச்சு: கடந்த ஐந்து ஆண்டுகளில், 800க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை, 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. உயிர் காக்கும் மருந்துகளின் விலையும் மிகவும் அதிகரித்துள்ளது. புற்று நோய்க்கான மருந்துகள் 50 சதவீதம், நீரிழிவு நோய்க்கான மருந்துகள் விலை 30 சதவீதம் அதிகரித்து உள்ளது என, ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மருந்து தயாரிப்பு நிறுவன ஊழியர்களின் ஊதிய உயர்வு, மூலப்பொருட்கள் விலை உயர் வையும் கவனத்தில் கொள்ளணும் அல்லவா?

தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் பேட்டி: 'டாஸ்மாக்' ஊழலை கண்டித்து, தமிழகம் முழுதும் உள்ள குக்கிராமங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அன்று ஸ்பெக்ட்ரம் ஊழல், கிராம மக்களிடம் ஏற்படுத்திய விழிப்புணர்வை போல, இன்று டாஸ்மாக் ஊழல் குறித்த விழிப்புணர்வும் கிராம மக்களிடம் சென்றடையும். அது, இன்னும், 12 மாதங்களில் நடக்கஉள்ள சட்டசபை தேர்தலில், தி.மு.க., ஆட்சியை வீழ்த்துவதற்கு உரிய வெள்ளோட்டமாக அமையும்.

நாலு வருஷமா, 'டாஸ்மாக்' ஊழலை கண்டிக்காம இருந்துட்டு, இப்ப தேர்தலுக்காகத் தான் போராடுறோம் என்பதை போட்டு உடைச்சுட்டாரே!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us