Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

PUBLISHED ON : பிப் 25, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேச்சு: முன்னாள் முதல்வர் பழனிசாமி, தன்னை ஆட்சி அதிகாரத்தில் உட்கார வைத்தவர்களுக்கு துரோகம் செய்தவர். லோக்சபா தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என, பண மூட்டையுடன் பழனிசாமி சுற்றி வருகிறார்.

நம்மகிட்ட இருக்க வேண்டிய மூட்டை, அவரிடம் இருக்கே என்ற விரக்தி இவரது பேச்சில் தெளிவா தெரியுது!



அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை சந்தித்தது போல, அரசு மருத்துவர்களையும் சந்தித்தால், மருத்துவர்களின் கோரிக்கை விஷயத்தில் திருப்புமுனை ஏற்படும். அதுவும், கருணாநிதி ஆட்சியில் போடப்பட்ட அரசாணை குறித்த கோரிக்கை உடனடியாக நிறைவேறும் என்று நம்புகிறோம்.

புதுப்புது திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை வைக்கிறாங்க... அவர் போட்ட அரசாணையை மட்டும் கண்டுக்கவே மாட்றாங்களே, ஏன்?

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: இலங்கை -- தமிழகம் இடையே கடற்பரப்பு மிகவும் குறுகியது என்பதால், மற்ற நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைவதை இரு நாட்டு மீனவர்களும் தவிர்க்க முடியாது. இதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது. இரு நாட்டு மீனவர்கள், அரசு பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன், தன் கடமையை முதல்வர் ஸ்டாலின் முடித்துக் கொள்ளக் கூடாது. அனைத்து கட்சி தலைவர்களுடன் டில்லி சென்று, பிரதமரை சந்தித்து, மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

தேர்தல் முடிஞ்சதும், ஸ்டாலின் கை காட்டுபவர் தான் பிரதமர்னு தி.மு.க.,வினர் சொல்றாங்களே... அப்புறம் இதெல்லாம் தேவைப்படாதே!

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: மத்திய அரசின் பல்வேறு விவசாய திட்டங்களில் இருந்து, நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே, தமிழக அரசு வேளாண் பட்ஜெட்டை வகுத்துள்ளது. இவை அனைத்தும் மத்திய அரசின் திட்டங்களின் நீட்சி என்பதை, மாநில அரசு மறைக்காமல் தெளிவுபடுத்தி இருக்க வேண்டும். கூட்டாட்சி தத்துவம் என்பது ஒரு வழிப்பாதை அல்ல என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.

ஸ்டிக்கரை மாற்றி ஒட்டி ஆதாயம் தேடுபவர்கள், மத்திய அரசு திட்டங்களின் நீட்சின்னு எப்படி சொல்வாங்க?





      Our Apps Available On




      Dinamalar

      Follow us