Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

PUBLISHED ON : பிப் 24, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
அரக்கோணம் தொகுதி தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன் பேச்சு:இந்தியாவுக்கு வந்த ஜப்பான் பிரதமர், 'தமிழகத்தில் செயல்படுத்தி வரும் காலை சிற்றுண்டி திட்டம், இல்லம் தேடி கல்வி, மகளிர் உரிமைத்தொகை திட்டங்களை எப்படி செயல்படுத்துகிறீர்கள். உங்களுக்கும், மத்திய அரசுக்கும் மோதல் இருக்கும் போது, உங்களுக்கு எப்படி பணம் கிடைக்கிறது' என, கேட்டறிந்தார்.

இதையே சாக்கா வச்சு, ஜப்பான் வளர்ச்சி வங்கியான, 'ஜைகா'வை தமிழகத்துக்கு தாராளமா கடன் கொடுக்க, அவரை பரிந்துரை செய்ய சொல்லி இருக்கலாமே!

தி.மு.க., தலைமை நிலைய செய்தி தொடர்பு துணை செயலர் கோவை செல்வராஜ் பேட்டி: தமிழகத்தில் உள்ள, 3 கோடியே 13 லட்சம் பெண் வாக்காளர்களும் தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க தயாராக உள்ளனர். இந்த ஆட்சியின் மூன்றாண்டு காலத்தில், இலவசபஸ் பயணம், பொங்கல் பரிசு, மகளிர் உரிமை தொகை, புதுமை பெண் திட்டம், காலை சிற்றுண்டி திட்டத்தால் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஓட்டுக்களும் தி.மு.க.,வுக்கு தான் கிடைக்கும்.

அப்ப எதிர்க்கட்சிகள் எல்லாத்துக்கும் டிபாசிட் கூட தேறாதுன்னு இவர் உறுதியா சொல்றாரா?

தமிழக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் பேட்டி: தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால், ஒவ்வொரு ஜாதியிலும் உள்ள அரசு அதிகாரிகள், உயர் பதவி வகிப்பவர்கள், பொருளாதார நிலை ஆகியவற்றை கணக்கெடுக்க வேண்டும். அந்தந்த ஜாதியில் எவ்வளவு ஏழைகள் இருக்கின்றனர்; எவ்வளவு உயர்ந்தவர்கள் இருக்கின்றனர்; அவர்களில் எவ்வளவு பேர் ஐ.ஏ.எஸ்., -- ஐ.பி.எஸ்., உள்ளிட்ட உயர் பதவிகளில் இருக்கின்றனர் என, புள்ளி விபரங்களை எடுக்க வேண்டும். எந்த சமூகத்தில் சமநிலை இல்லையோ, அந்த சமூகத்திற்கு இது கிடைத்தாக வேண்டும்.

அதெல்லாம் சரி... ஆனால், தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துற எண்ணம் தான் தமிழக அரசுக்கு துளியும் இல்லையே!



முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: மூன்று ஆண்டுகளில், 60,567 பேருக்கு, அரசு பணி வழங்கி உள்ளதாக, தமிழக அரசு கூறியுள்ளது. சட்டசபை தேர்தலின் போது, அரசு துறைகளில் காலியாக உள்ள, 3.50 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். புதிதாக 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என, தி.மு.க., வாக்குறுதி அளித்தது.

இருக்கிறவங்களுக்கு சம்பளம் கொடுக்கவே மாசா மாசம் அரசுக்கு மூச்சு முட்டுது... இதுல, எங்க புதுசா ஆட்களை நியமிக்கிறது?





      Our Apps Available On




      Dinamalar

      Follow us