Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

PUBLISHED ON : ஆக 05, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி பேட்டி:

மேட்டூர் அணை நிரம்பி வழிவது மகிழ்ச்சி. அந்த நீர் உபரியாக கடலில் கலப்பது தான் வேதனை. நீரை சேமிக்க காவிரி குறுக்கே மேலும் பல தடுப்பணைகளை கட்ட வேண்டும். நீரை தேக்குவதால் சுற்றுப்பகுதி ஏரி, கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். பயிர் சாகுபடி, குடிநீர் பிரச்னைகளை தீர்க்க முடியும்.

அவ்வளவு, நீர் மேலாண்மை தெரிஞ்ச அரசியல்வாதிகள் தமிழகத்தில் இல்லை... இருக்கிற அரைகுறையா தெரிஞ்சவங்களையும் மக்கள் ஆதரிப்பது இல்லை!

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: தினமும் அரங்கேறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட, சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில், தி.மு.க.,வினருக்கு தொடர்பு, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு என, தமிழக மக்களை, தி.மு.க., அரசு துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில், மக்கள் நலனில் சிறிதும் அக்கறையின்றி, கார் பந்தயம் நடத்த தீவிரம் காட்டுவது, கடும் கண்டனத்துக்கு உரியது.

இவர் சொல்ற பல துயரங்களுக்கு மத்தியில், மக்களுக்கு பொழுதுபோக்கா இருக்கட்டுமேனு ஒரு நல்ல எண்ணத்துல கார் பந்தயம் நடத்துறாங்களோ என்னமோ?

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பேட்டி: பள்ளிகளில், 'எமிஸ்' எனும் செயலியில் அன்றாட பணிகளை எழுதும் பணியால், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில் பிரச்னை ஏற்படுவதாக, மூன்று ஆண்டுகளாக குழப்பம் இருந்து வருகிறது. எனவே, எமிஸ் பணிக்காக, 7,000 பேரை புதிதாக பணி நியமனம் செய்துள்ளோம். இனிமேல், எமிஸ் பணியால் ஆசிரியர்களுக்கு ஏற்படும் பிரச்னை படிப்படியாக குறைக்கப்படும்.

வரும், 2026 சட்டசபை தேர்த லுக்கு முன், எமிஸ் பிரச்னையை தீர்க்கலைனா, ஆசிரியர்கள் ஓட்டு, தி.மு.க.,வுக்கு அம்போ தான்!

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: போதைப் பொருட்களை ஊக்குவிக்கும் அரசாக, தி.மு.க., உள்ளதன் காரணமாக, தமிழகம் போதைப் பொருட்களின் புகலிடமாக மாறியுள்ளது. கஞ்சா விற்பனை, போதைப் பொருட்கள் நடமாட்டம், கொலை, கொள்ளை போன்றவற்றில், தி.மு.க., அரசு முதலிடத்தை பெற்று சாதனை படைத்திருக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக திகழ்ந்த தமிழகம், இன்று, போதைப் பொருள் கடத்தலில் முதன்மை மாநிலமாக இருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

'கல்யாண வீடா இருந்தா நான் மாப்பிள்ளை; சாவு வீடா இருந்தா நான் பிணம்' என்ற எஜமான் பட, சினிமா, 'டயலாக்' மாதிரி, நல்லது, கெட்டது எல்லாத்துலயும் தமிழகம் முதலிடம் தான்!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us