Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

PUBLISHED ON : ஜூன் 28, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
தமிழக பா.ஜ., செயலர் கராத்தே தியாகராஜன் அறிக்கை: சென்னையில், இந்திராவுக்கு சிலை நிறுவ விரும்பிய அமிதாப்பச்சன் அரசியலிலிருந்து விலகினார். வாழப்பாடி ராமமூர்த்தியின் தலைவர் பதவி பறிபோனது. ராஜிவ் இறக்கும் முன், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள இந்திரா சிலைக்கு தான் மாலை அணிவித்தார். இந்திரா சிலை நிறுவ விரும்பும் தலைவர்களின் அரசியல் செல்வாக்கு சரிந்து போனது என்பது சென்டிமென்ட் விவகாரம். தமிழக காங்கிரஸ் தலைவர்களாக இருந்த யாரும் சத்தியமூர்த்தி பவனில் இந்திரா சிலை அமைக்க ஏன் முன்வரவில்லை?

இப்ப இருக்கிற தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திராவுக்கு சிலை எடுத்து, அந்த சென்டிமென்டை உடைப்பார்னு நம்புவோம்!

தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: குஜராத்தில், 2009ல் இதேபோன்ற ஒரு கள்ளச்சாராய மரணம் நடந்தது. அதன்பின், குஜராத் அரசு கள்ளச்சாராயம் விற்போருக்கு, துாக்கு தண்டனை என்ற சட்டத்தை அமல்படுத்தியது. தைரியமிருந்தால் கள்ளக்குறிச்சி விவகாரத்தில், சி.பி.ஐ., விசாரணைக்கு கோரிக்கை விடுத்து, தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை வழங்க வாதிடுவோம் என்று சொல்ல, திராவிட மாடல் தி.மு.க., அரசு தயாரா?

ராஜிவ் கொலையாளிகளையே மன்னித்து விடுதலை பண்ண கோரிய புண்ணிய ஆத்மாக்கள் இருக்கிற தமிழகத்துல, கள்ளச் சாராயத்துக்கு துாக்கு தண்டனையா...? நெவர்!

த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: தமிழகத்தில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள தி.மு.க., கர்நாடக காங்கிரஸ் அரசோடு பேசி காவிரி நீரை பெற முடியாததற்கு என்ன காரணம். இதுதான் கூட்டணி தர்மமா? டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரமான விவசாயம் பாதிக்கப்படுகிறது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை கர்நாடக அரசை வலியுறுத்தி பெற்றுத்தர வேண்டும்.

கூட்டணியை கட்டி காப்பாற்றுவது எவ்வளவு சிரமம் தெரியுமா... அற்பமான காவிரி தண்ணீருக்காக எல்லாம் கூட்டணியை, 'காவு' கொடுப்பாங்களா?



தமிழக பா.ஜ., செயற்குழு உறுப்பினர் சவுதாமணி அறிக்கை: கேரளா சட்டசபையில் கேரளம் என அழைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகம் என்ற சொல்லில் அகம் என்றால் மனம், இல்லம் என்று அர்த்தம். பல மொழிகள் பேசும் இந்தியாவில், தன் இனத்தின், மொழியின் பெயரிலேயே மாநிலத்தின் பெயரை கொண்ட பகுதி நம் தமிழகம். எனவே, தமிழ்நாடும், தமிழகமாக கட்டயமைக்கப்பட்டால் சாலச்சிறப்பு.

முன்னொரு காலத்துல, 'திராவிட நாடு' கேட்டவங்களிடம் இந்த கோரிக்கை எடுபடாது!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us