Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

PUBLISHED ON : மார் 28, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான டாக்டர் சரவணன் அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் நடத்திய கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் பங்கேற்றனர். தமிழகத்தின் ஜீவாதாரமான முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக, 1,000 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்ட, கேரள அரசு முயற்சிக்கிறது. கர்நாடக அரசு, மேகதாதுவில், 1,500 கோடி ரூபாய் செலவில் அணை கட்ட முயற்சிக்கிறது. இதைக் கண்டித்து, தடுத்து நிறுத்தும் வகையில், பினராயி விஜயன், சிவகுமாரிடம் ஸ்டாலின் வாய் திறந்து பேசினாரா?

மத்திய அரசுக்கு எதிரான கூட்டத்துல, மாநில உரிமைகள் எல்லாம் பின்னுக்கு போயிடுச்சு போல!

இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் பேட்டி: தமிழக நிதிநிலை அறிக்கையில், '5 லட்சம் பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில், ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்கள், 86,000 பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பட்டா வழங்கியவர்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும். வீட்டுமனை இல்லாத மக்களுக்கு, 3 சென்ட் நிலம் வழங்க வேண்டும்.

வீட்டு மனை பட்டாவும் தந்து, வீடும் கட்டித் தரணும் என்றால், மக்கள் உழைக்கவே வேண்டாம்னு தோழர் சொல்றாரோ?



தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் பேட்டி: 'மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடத்தப்படாது' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய பின், மத்திய அரசுக்கு எதிராக கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நடத்தினார். அதில் பங்கேற்ற கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், துணை முதல்வர் உதயநிதி மாறன் என, பெயரை மாற்றி உச்சரிக்கிறார். தமிழக துணை முதல்வர் பெயர் கூட சிவகுமாருக்கு தெரியவில்லை. அவரை அழைத்து கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடத்துவது, தி.மு.க.,வின் பரிதாப நிலையைக் காட்டுகிறது.

தி.மு.க., தலைவர் குடும்பத்தில் பலரது பெயரிலும், 'நிதி' இருப்பதால், சிவகுமார் தடுமாறியிருப்பாரு!

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளில் ஒரே ஒரு இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் கூட நியமிக்கப்படவில்லை. கடந்த காலங்களில் இல்லாத வகையில், தி.மு.க., ஆட்சிக் காலத்தில் தான் கல்வித்துறை மிகவும் மோசமான சீரழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

இதுல, தி.மு.க., நாலு வருஷமும், அ.தி.மு.க., எட்டு வருஷமும் ஆட்சியில இருந்திருக்கு... அ.தி.மு.க.,வை மட்டும் டாக்டர் விமர்சிக்காமல் தவிர்ப்பது ஏன்?





      Our Apps Available On




      Dinamalar

      Follow us