Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'ஏன் இந்த கதவடைப்பு?'

'ஏன் இந்த கதவடைப்பு?'

'ஏன் இந்த கதவடைப்பு?'

'ஏன் இந்த கதவடைப்பு?'

PUBLISHED ON : ஜூலை 04, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
சென்னை திருவொற்றியூர் சட்டசபை தொகுதி, தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், சென்னை மண்டல தேர்தல் பொறுப்பாளரான ஆ.ராஜா, வடசென்னை எம்.பி., கலாநிதி, எம்.எல்.ஏ.,க்கள் கே.பி.சங்கர், சுதர்சனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிர்வாகிகள் அமர்ந்ததும், பத்திரிகையாளர்கள், போலீசார் என அனைவரையும் வெளியேற்றிவிட்டு, மண்டபத்தின் கதவை அடைத்து விட்டனர். அதன்பின், தாமதமாக வந்த கட்சி நிர்வாகிகள்கூட வெளியே நிற்க வைக்கப்பட்டனர்.

இதை கவனித்த இளம் நிருபர் ஒருவர், 'அடேங்கப்பா... அவ்வளவு ரகசியமா என்ன தான் பேசுவாங்க...' என, வியந்தார். இதை கேட்ட மூத்த நிருபர், 'ரகசியம் ஒண்ணும் இல்லப்பா... உட்கட்சி பஞ்சாயத்து, கமிஷன் விவகாரங்கள் பத்தி ஆளாளுக்கு புகார் சொல்லுவாங்க... அதெல்லாம் நமக்கு தெரியக்கூடாதுன்னு தான் இந்த கதவடைப்பு...' எனக் கூற, இளம் நிருபர் ஆமோதித்தபடியே நடந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us