Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'நமக்குதான் ஒண்ணும் இல்லப்பா...!'

 'நமக்குதான் ஒண்ணும் இல்லப்பா...!'

 'நமக்குதான் ஒண்ணும் இல்லப்பா...!'

1


PUBLISHED ON : ஏப் 17, 2026 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : ஏப் 17, 2026 12:00 AM

1


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் சுதர்சனத்திற்கு ஓட்டு கேட்டு, அக்கட்சியின் துணை பொதுச் செயலர் கனிமொழி, சமீபத்தில் செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே பிரசாரம் செய்தார்.

அப்போது, 'மகளிர் உரிமைத்தொகை உங்களுக்கு எவ்வளவு கிடைக்கப் போகிறது?' என, அங்கிருந்த பெண்களிடையே கேட்டார். பலர் இரட்டை விரலை உயர்த்தி காண்பித்தனர்.

உடனே கனிமொழி, 'தி.மு.க., கூட்டத்தில் இரட்டை விரலை காட்டுகிறீர்களே' என்றார். உடனே, கூட்டத்தினர் ஐந்து விரலை காண்பித்தனர்.

அதிர்ச்சியடைந்த கனிமொழி, 'ஐந்து விரல் காட்டும் அளவுக்கு தர முடியாது' என்று சமாளித்தவர், தொடர்ந்து பேசினார்.

கூட்டத்தில் இருந்த ஆண் ஒருவர், 'தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம், உரிமைத்தொகை எல்லாம் தர்றாங்க... நமக்குதான் ஒண்ணும் தர மாட்டேங்கிறாங்க பா...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap