Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'நம்மை விட கூடுதல் நம்பிக்கை!'

 'நம்மை விட கூடுதல் நம்பிக்கை!'

 'நம்மை விட கூடுதல் நம்பிக்கை!'

1


PUBLISHED ON : ஏப் 24, 2026 12:56 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 24, 2026 12:56 AM

1


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்திசமீபத்தில் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், 'கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில், கே.வி.குப்பம் தொகுதியில் அதிக ஓட்டுகள் பெற்று நான் வெற்றி பெறுவேன். அ.தி.மு.க., கூட்டணியின் அனைத்து பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அருமையாக பணியாற்றியதால், என் வெற்றி உறுதி.

'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும். 2011 முதல் 2021ம் ஆண்டு வரை, 10 ஆண்டு காலம் அ.தி.மு.க., சிறப்பான ஆட்சி தந்தது. அதேபோன்று மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி மலரும்' என்றார்.

இதை கேட்ட அ.தி.மு.க., தொண்டர் ஒருவர், 'நம்ம கட்சி தான் ஆட்சி அமைக்கும் என்று, நம்மை விட ரொம்பவே நம்பிக்கையா இருக்காரே...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us