Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ நல்ல திட்டம் தானே இது?

 நல்ல திட்டம் தானே இது?

 நல்ல திட்டம் தானே இது?

1


PUBLISHED ON : மே 05, 2026 12:41 AM

Follow on Google

PUBLISHED ON : மே 05, 2026 12:41 AM

1


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க., மாணவரணி சார்பில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்ட, உதவி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சில தினங்களுக்கு முன் சென்னை, அறிவாலயத்தில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தி.மு.க., மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

உதவி மையம் குறித்து, தி.மு.க., மாணவரணி செயலர் வீரமணி கூறும்போது, 'பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, அவர்களின் மதிப்பெண்ணுக்கு ஏற்ப, எங்கு, என்னென்ன படிப்பு படிக்கலாம் என்பது குறித்து வழிகாட்டுதல் வழங்கப்படும். 'நான் முதல்வன்' போன்ற தி.மு.க., அரசின் திட்டங்கள் குறித்தும், இந்த உதவி மையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும்' என்றார்.

இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, வேறு யார் ஆட்சி அமைச்சாலும் பின்பற்றக் கூடிய திட்டமா இருக்குமா இது...' எனக் கேட்டார்; மூத்த நிர்வாகிகள் பலரும், 'திருதிரு'வென்று விழித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us