PUBLISHED ON : ஜூன் 16, 2025 12:00 AM

வைகாசி விசாகத்தை முன்னிட்டு, மதுரை திருப்பரங்குன்றத்திற்கு சென்ற பக்தர்களுக்கு, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் மனைவியுடன் அவர் பங்கேற்ற போது, தொண்டர் ஒருவர், 'கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா...' என கோஷமிட, அருகில் இருந்தவர்களும் உணர்ச்சிவசப்பட்டு, 'அரோகரா' என கோஷமிட்டனர்.
முருகன் பெயரை விதவிதமாக சொல்லி, 'அரோகரா' என சொல்லி வந்த தொண்டர் திடீரென, 'செல்லுார் ராஜுவுக்கு அரோகரா' எனக் கூற, செல்லுார் ராஜுவும், மனைவியும், 'ஷாக்'ஆகினர்.
நல்லவேளையாக அருகில் இருந்தவர்கள், 'அரோகரா' சொல்லவில்லை. தொண்டரை கண்டித்த செல்லுார் ராஜு, பிறகு வழக்கமான தன், 'டிரேடு' மார்க் சிரிப்புடன், அன்னதானம் வழங்கினார்.
தொண்டர் ஒருவர், 'மகிழ்ச்சியுடன் அன்னதானம் போட வந்த அண்ணனை, ஒரு செகண்ட்ல, 'அப்செட்' பண்ணிட்டாங்களே...' என, முணுமுணுத்தபடியே அங்கிருந்து கிளம்பினார்.