Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'சீமானையே மிஞ்சிட்டாரே!'

 'சீமானையே மிஞ்சிட்டாரே!'

 'சீமானையே மிஞ்சிட்டாரே!'

 'சீமானையே மிஞ்சிட்டாரே!'

PUBLISHED ON : மார் 12, 2026 02:55 AM


Google News
Latest Tamil News
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டசபை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக, பாண்டி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது அறிமுக கூட்டம், சமீபத்தில் நடந்தது.

இதில், பாண்டி பேசுகையில், '234 தொகுதிகளிலும் சீமான் வீசிய துப்பாக்கி குண்டுகளில் ஒன்றாக, இங்கு வந்து விழுந்திருக்கிறேன். நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றால், கோவில்பட்டியை தலைமை இடமாகக் கொண்டு, தனி மாவட்டம் உருவாக்கப்படும்.

'கோவில்பட்டி நகராட்சியை, மாநகராட்சியாக மாற்றுவோம். கயத்தாறு பேரூராட்சியை, நகராட்சியாக மாற்றுவோம். நான் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,வாக பொறுப்பேற்ற ஆறு மாதங்களுக்குள் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால், ஏழாவது மாதம் என் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்' என்றார்.

இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'சவால் விடுவதில், நம்ம தலைவர் சீமானையே, பாண்டி மிஞ்சிட்டாரே...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் சிரித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us