PUBLISHED ON : மார் 23, 2025 12:00 AM

மதுரை நகரில் வீடுகளில் மாடு, பன்றி வளர்க்க தலா 500, நாய், பூனை, குதிரை வளர்க்க தலா 750, ஆடு வளர்க்க 150 ரூபாய் கட்டணம் விதித்து, மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
இது குறித்து, அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு, 'திராவிட மாடல் ஆட்சி வந்ததில் இருந்து அவங்க விதித்த வரியை எண்ணவே முடியல. வரிக்குதிரையில இருக்கிற வரியை விட அதிகம். இப்போ பூனை, நாய், மாடு, குதிரைக்கும் வரி போட்டாச்சு. அடுத்தும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தா, நடந்தால் கூட வரி போடுவாங்கப்பா...' என, காமெடியாக பேசினார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'சிறப்பு விருந்தினராஇவரும் கலந்துக்கிட்ட மாநகராட்சி கூட்டத்தில் தான் இந்த தீர்மானத்தையே நிறைவேற்றினாங்க... இவரதுகட்சியை சேர்ந்தவர் தான் அங்க எதிர்க்கட்சி தலைவராகவும் இருக்காரு... அப்பவே எதிர்ப்பு தெரிவிக்காம, இங்க வந்து தாளிக்கிறாரே...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சத்தமின்றி சிரித்தனர்.