PUBLISHED ON : செப் 26, 2025 12:00 AM

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில், வட சென்னை தி.மு.க., - எம்.பி., கலாநிதி ஏற்பாட்டில், 300 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
நலத்திட்ட உதவிகளை வழங்கி, துணை முதல்வர் உதயநிதி பேசுகையில், 'தி.மு.க., மட்டுமே தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்காக சிந்தித்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு தனி துறை துவங்கியது, முன்னாள் முதல்வர் கருணாநிதி. மாற்றுத் திறனாளிகள் என்ற பெயரை வைத்ததும் அவர் தான்.
'அந்த துறையை, தற்போதைய முதல்வரும் தன் வசம் வைத்து, திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டு சட்டசபையில் நான் பேசியபோது, மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் நியமன பதவி வழங்க வேண்டும் என கேட்டேன். முதல்வர் அந்த கோரிக்கையை ஏற்று, ஆணை வெளியிட்டார்...' என்றார்.
இதை கேட்ட பார்வையாளர் ஒருவர், 'மகன் கேட்டால், முதல்வரால மறுக்க முடியுமா...?' என கூற, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.